• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சிந்தனையில் உயர்ந்து.

siddharbhoomi by siddharbhoomi
October 19, 2020
in பொது
0
Rising in thought
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிந்தனையில் உயர்ந்து – நம்மை நாம் நம்ப வேண்டும்..!!

ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர்களுக்கு வழங்கப்பட்டது வெள்ளிப் பேழையுமல்ல! வெண் சாமரமும் அல்ல! நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள்.

Save Money 728x90 ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது.

ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கி விடுவது சுலபம். அதனை ஆக்க பூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வது தான் கடினம்.

ஒரு செயலைத் தொடங்கம் போது இது கட்டாயம் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சிந்தனை இருந்தால் தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும். செயல்படுவதற்கான மன உறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும்.

EconomyBookings 600x90 முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி. பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொள்பவரே பெருமையும், வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை.

கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமையும்.

நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது. அந்த தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும்.

எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் பாரதியாருக்கு உட்கார சரியாசனம் கொடுக்கவிலலை. அதைக் கண்டதும் பாரதியார் கூனிக் குறுகிவிடவில்லை.

728 x 90 எட்டையபுர அரசரைப் பார்த்து, “நீர் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தன். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு அவருக்கு இணையாக ஒரு ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.

பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை.

அரசருக்கு இணையாக உட்கார்ந்த அவருடைய துணிவைப் பாராட்டமால் இருக்க முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டதே கிடையாது. தன்னுடைய பாடலைப் பற்றியும் உயர்வாக மதிப்புக் கொண்டிருந்தார்.

தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டபடியினால் தான் அவருடைய பாடல்களும் உயர்வாக இருக்கின்றன. இன்று பாரதியார் பாடல்கள் பல மொழிகளிலும் வெளிவந்து இருக்கின்றன.

728x90 உள்ளத்தின் உயர்வு, உலகத்தின் பெரு மதிப்பு..

கல்கண்டு பத்திரிக்கை ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் தன்னைத் தானே உயர்வாக போற்றிக் கொண்டார். தன்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டு கூட புகழ்ந்து கொள்வது அவருடைய இயல்பாக இருந்தது.

இந்த புகழுரையே அவருக்கு மேன் மேலும் வெற்றியைத் தேடித் தந்தது. அவர் போட்டுக் கொண்ட அடைமொழிகளும், புகழுரைகளும் ஏராளம்.

ஆங்கில மொழி நூல்களை எழுதிய எழுத்தாளரைப் போல அட்டை படத்தில் தன்னுடைய போட்டோ வெளியிட்டு புதுமுறையை உருவாக்கினார். தன்னுடைய புகைப்படத்தை அட்டையில் முதன்முதலாக வெளியிட்டார்.

728x90 Find Your Car இவருடைய போட்டோ தான் புத்தக அட்டையில் காட்சி அளிக்குமே தவிர ஓவியம் அதில் இடம் பெறாது. சுயமுன்னேற்ற நூல்களில் தன்னுடைய படத்தை வெளியிட்டு எல்லோருடைய மனதிலும் ஒரு விதமான கம்பீரத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார்.

மற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய பட்டப்பெயர்களைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டிய போது இவர் மட்டும் துணிவுடன் செயல்பட்டு அடைமொழிகளுடன் தன்னுடைய பெயரையும் சேர்த்து வெளியிட்டார்.

தத்துவ மேதை, அச்சம் போக்கும் அறிஞர் புரட்சி எழுத்தாளர் பல்கலை வித்தகர் இதுபோன்ற இன்னும் பல பட்டங்களைத் தாங்கிக் கொண்டு தான் அவருடைய நூல்கள் அமைந்திருக்கும்.

தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு செயலாற்றினார். அவருக்கு துணிவு அதிகம் இருந்தது. எழுதுவது உயர்வான பணி என்று எண்ணி அதனை பலரும் ஒப்புக் கொள்ளும்படி செய்து பணக்காரராக வாழ்ந்து காட்டினார்.

728*90 மற்றவர்களைப் போல எழுத்துலகிற்கு வந்துவிட்டோமே என்று அங்கலாய்க்காமல், அதனையே சிறப்பாக நினைத்து நூல் எழுதி பெயரும் புகழும் செல்வாக்கும் பெற்றார்.

இவரைப் போலவே நாமும் சிந்தனையில் உயர்ந்து நம்மை நாமே மேன்மை படுத்திக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.

💗வாழ்க வளமுடன்💗

Previous Post

அதனை தாண்டி செல்ல வேண்டும்.

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் – நவராத்திரி

Next Post
Madurai Meenakshi Goddess - Navratri

மதுரை மீனாட்சி அம்மன் - நவராத்திரி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »