தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கினார்கள்.
தூத்துக்குடியில் மாநகரில் திங்கட்கிழமை காலை (20-7-2020 ) மூன்றாவது வாரமாக
சமுக இடை வெளியுடன் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வணிகர்களின் பாதுகாவலர் த.வெள்ளையன் அவர்களின் ஆணையின் படி

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பாக
கொரனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் ஹோமியாபதி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைப்பொதுச் செயலாளரும், மாவட்டத் தலைவருமான பழரசம் பா.விநாயக மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இன்று 20-07-2020 திங்கட்கிழமை காலை மூன்றாவது வாரமாக நகர வர்த்தகர்களின் மத்தியசங்க பொதுச்செயலாளர் திரு த.பாஸ்கர் அவர்கள் தலைமையில்
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநகர அமைப்பாளர் திரு பெ.வேல்முருகன் அவர்கள் கபசுர குடிநீர் ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சி கடந்த (06-07-2020) வாரம் முதல் தொடங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று காலை சமுக இடை வெளியுடன் நடை பெறும்.










