ஸ்ரீ அரவிந்தரை தொடர்பு கொள்வது மேலும் எளிதாகி விட்டது.
சந்தேகமில்லாமல் தற்போது நீங்கள் அவருடன் சுலபமாகத் தொடர்பு கொள்ளலாம். நிறையப் பேர் அவருடன் அவ்வாறு தொடர்பு கொண்டு தேவையான பதில்களைப் பெற்று வருகிறார்கள்.
அவரைத் தொடர்பு கொள்வது எளிதாகி விட்டது.
தற்போது அவர் மிகுந்த செயல் திறன் படைத்தவராக உள்ளார்……
ஏதேனும் சரியாக நடைபெறாமலிருந்து நீங்கள் அதற்கான காரணத்தை அறிய விரும்பினால் அல்லது உங்களிடமிருக்கும் பலவீனம் ஒன்றை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டுமென்று கருதினால், ஏதேனுமொரு சுகவீனத்திலிருந்து நலம் பெற விரும்பினால், தூய்மை பெற விரும்பினால், துயரங்களேதிலுமிருந்து விடுபட விரும்பினால் சமாதிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தரைக் கேளுங்கள்.
உங்களுக்கு பதில் கிடைக்கும்.
பதில் மாத்திரமல்ல அவரது ஆசியும், அருளும், அமைதியும், ஒளியும் கிடைக்கும்.
ஆற்றல் மிக்க அவரது அன்பினால் நீங்கள் சூழப் படுவீர்கள். நீங்கள் உங்களை அவரிடத்தில் ஒப்புவித்து விட்டீர்களானால் நீங்கள் அனைத்து விபத்துகளிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.
காரணம் அவரது செல்வாக்கு. எளிமையான, நேர்மையான பணிவு மிக்க அனைவருக்கும் தன்னை அவர் வெளிப்படுத்துகிறார்.
அவர் முழுப் பிரக்ஞையுடன் இங்கே இருக்கிறார். உலகின் காரியங்களைனைத்தையும் வழி நடத்துகிறார்.
ஸ்ரீ அன்னை.










