ஸ்ரீ சர்பசித்தர், மாங்காடு.
முன்பொரு காலத்தில்இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது.ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும்பெரியதாகஒருலிங்கவடிவில்ஒருகல் தென்பட்டுள்ளது.
இங்கேதான்ஸ்ரீசர்பசித்தர்ஜீவசமாதிஅடைந்துஉள்ளார்.அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது.
அந்தலிங்கத்தின்மீதுஇடதுபுறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன்வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும், பிரணவமந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது பஞ்சபுதங்களைகுறிக்கும் விதமாக ஐந்துதலை நாகம் போன்றஅமைப்பு அந்தலிங்கத்தின்மீதுஉள்ளது.

இங்கேசமாதியாகியுள்ள சர்ப சித்தர் காலஹஸ்தியில்இருந்துவந்தவர்என்றும், வடக்குநோக்கிசமாதிஅடைந்துஉள்ளார்என்றும்கூறப்படுகிறது.
இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும்.சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப்பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதிபுதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது.
அதன்அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்குசெல்வதைத் தவிர்த்துள்ளனர்.
காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள்மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்குமுன் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி.ரவிச்சந்திரன்அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதிஅடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சித்தர் அடிகளார்பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதிஅமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். பின்னர்படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ராபவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரிஅன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப்பெற்றுச் செல்கின்றனர்.
#Bengaluru to #Mumbai Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
இது வேறெங்கும் இல்லாத, யாருக்கும் கிட்டாத கொடுப்பினை என்றால்அது மிகையில்லை.
சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல்பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும்பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன.
குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின்சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன.
தொடர்புக்கு:சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ்நகர், மாங்காடு











