பைரவர் அவதரித்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி.
ராகுகால வழிபாடு நேரம் காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
☘️
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.
☘
#பைரவருக்குண்டானபொதுகாயத்ரி
☘
சுவாநத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்
☘
பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
☘️
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். ராகு காலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்வதால் mதோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
☘️
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
ஐஸ்வர்யம்தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு.
☘️
பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதியில் ஸ்ரீபைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி sவழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் அனைத்தும் அகலும்.
பைரவரை வணங்கினால், இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்வது மிக மிக அவசியம்.
☘️
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும்?
அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பதாக ஐதீகம். எனவே, தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வணங்கினால், அஷ்டலட்சுமியரின் அருளும் கிடைக்கும.
☘️
தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வ கடாட்சம் கிடைக்கப் பெறலாம். நம் பாவங்கள் விலகி, புண்ணியங்கள் பெருகும்.
☘️
நீண்டநாளாக வர வேண்டிய பணம் வந்துசேரும். தர வேண்டிய பணத்தைத் mதிருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
☘️
வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். சனியின் தாக்கம் தீரும்.
☘️
வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
வீட்டில் தரித்திரம் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும்.











