அக்னி நட்சத்திரத்தையொட்டி தி.மலை அண்ணாமலையார் கோயில் உட்பட சிவாலயங்களில் தாராபிஷேகம் நடைபெற்றது.
☘️
அக்னி நட்சத்திரம் காலத்தில், சிவாலயங்களில் தாராபிஷேகம் நடைபெறும். அதன்படி, அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதை அடுத்து தி.மலை அண்ணாமலையார் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் அஷ்டலிங்க கோயில்கள், வாணியங்குளத் தெருவில் உள்ள பெரியாண்டவர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் நடைபெற்றது.
☘️
அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், மூலவர்களை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தை உயர தொடங்கவிட்டு, அதன் அடியில் மெல்லிய துவாரமிட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு வழிபாடு பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட மூலிகைகளை போட்டு, அதில் பன்னீரை ஊற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
☘️
பன்னீர் குளிர்ச்சியாகி, மூலவர்கள் மீது துளித் துளியாக விழும். இந்த அபிஷேக வழிமுறை வரும் 28-ம் தேதி வரை நடைபெறும். இறுதியாக, அக்னி தோஷ நிவர்த்தி பூஜைகள் நடைபெறும்.











