“நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்”
தெய்வங்களில் மிக்க வலிமையுள்ள தெய்வமும் குலதெய்வம்தான். குலதெய்வமே நமக்கு அருளைத் தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிநடத்தும் சக்தி கொண்டது.
உங்கள் வீட்டிலேயே மாதந்தோறும் பெளர்ணமி அன்று குலதெய்வ படத்தை வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.
வழிபாட்டு முறை:
அமாவாசை, பௌர்ணமி அன்று அதிகாலை யில் எழுந்து சுத்தமா குளித்து விட்டு சிவப்புநிற ஆடை உடுத்த வேண்டும். பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு மாலை அணிவித்தது, பச்சை அரிசி கோலம் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்மேல் நெய் தீபம் போட வேண்டும்.
சக்கரைப்பொங்கல்,மூன்று அல்லது ஐந்து பழங்கள் வைத்து பூஜை செய்யலாம்.
குலதெய்வ பிரார்த்தனை:
ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன்.
அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குலதெய்வ அருள்கிட்டும்.
குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்திற்கு எவ்வித குறையும் ஏற்படாது. வளமையான வாழ்க்கை கிடைக்கும்.
குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
நாமும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மை யைப் புரிந்து கொண்டு குலதெய்வத்தை வழிபட்டு, நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மைகள் தழைத்திட வேண்டுவோம்.











