திருஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல்
வேதநெறி தழைத்தோங்க மிகுசவத்
துறைவிளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய்
மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.
சேக்கிழார்
திருஞானசம்பந்தர் அந்தண குலத்தின் தலைமையான கௌணியர் கோத்திரத்தில், சிவநெறியில் ஒழுகிய சிவபாத இருதயர், பகவதியார் தம்பதிகளுக்கு மகவாய் பிறந்தார். இந்தபரம்பரை உலகின் தலையாய சைவசமயத்தையன்றி மற்ற அவசமயங்களை அறியாதவர்கள்.
திருஞானசம்பந்தர் வயது இரண்டு ஆண்டு தாண்டியிருந்தது. ஒருநாள் தந்தையார் சிவபாத இருதயர் சீர்காழி திருத்தல தெப்பகுளத்தில் நீராட புறப்பட்டார். குழந்தை சம்பந்தரும் அடம்பிடித்து தந்தையோடு சென்றது. தந்தையார் குழந்தையை தெப்பகுள படிக்கட்டில் உட்கார வைத்துவிட்டு நீராடச்சென்றார். சிவபெhttps://www.amazon.in/dp/B09W1KR6SG?ref=myi_title_dpருமான் தன்மகனை காத்தருள்வார் என்ற நினைப்புடன் சிவபாத இருதயர் நீரில் மூழ்கினார்.
தந்தையை காணவில்லையெனக்கருதி சம்பந்தக் குழந்தை சீர்காழி கோயிலின் சிகரத்தை பார்த்து அழுதது. அண்டகோடிகள் மற்றும் உயிர்களின் அதிபதியான சிவபெருமான் மனிதரூபம் கொண்டு பராசக்தியோடு குழந்தையின் அருகில் வந்து கிண்ணத்தில் பாலினை எடுத்து ஊட்டினர். சிறிது நேரத்தில் தந்தை சிவபாத இருதயர் குழந்தையிடம் வந்தார். அக்குழந்தையின் வாயில் ஒழுகியிருந்த பாலைக்கண்டு உனக்கு பாலை ஊட்டியது யார்? என கோபத்தோடு வினவினார். அதற்கு அந்த இரண்டரை வயது அற்புத குழந்தை திருத்தோணிபுரத்தில் காட்சி கொண்டிருந்த எம்பெருமானை
சுட்டிகாட்டி பாடிய முதல்பாட்டு.
தோடுடைய செவியன் விடை ஏறி
ஓர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என்
உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனை நாள்
பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே.
திருஞானசம்பந்தர்
பொருள்: தோடு என்னும் அணியை அணிந்துள்ள செவியனாகிய உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடப வாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தை கவர்ந்த கள்வன். ஒருகாலத்தில் நான்முகனின் வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். கம்பீரமான சீர்காழி என்னும் பிரம்மபுரத்தில் மேவிய எம்பெருமான் இவனே ஆவான்.











