பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை :
ஒரு முறை, ராமகிருஷ்ணரிடம் அவரது சீடர் ஒருவர், ‘பெண்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும். அதற்குரிய முறைகள் என்ன என்பது பற்றிக் கேட்டார்.
தன்னுடைய சிஷ்யன் கேட்டதும், மிகவும் ஆனந்தத்துடன் பெண்களின் மகிமையையும், அவர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் கூற ஆரம்பித்தார்.
பெண்கள் அனைவரும் தேவியின் ஸ்வரூபம் ஆவர்.
அவர்கள் அனைவரையும் தாயைப்போல கருத வேண்டும்.
ஸ்த்ரீகள் நற்குணங்களுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கற்புடையவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை அவமதிக்காமல் மதிக்கவேண்டியது கட்டாயமாகின்றது.
உண்மையை அறிந்தவனும், ஈஸ்வர தரிசனம் பெற்றவனும் பெண்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை.
அவர்கள் பெண்ணை ஜகதீஸ்வரியாகவே நினைத்து வழிபடுகிறார்கள்.
தாயை வணங்கும் மகனைப் போலவே பெண்ணை வணங்கவேண்டும்.
ஒருபோதும் பெண்ணைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்றும்’ அவர் கூறினார்.
பெண்ணின் மகிமையைப் பற்றி ஒரு முறை விவேகானந்தரிடம் ராமகிருஷ்ணர் கூறியுள்ளார்,
‘ உனக்குத் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கவேண்டுமென்றால், தேவியைப் பற்றிக்கொள்.
ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற மூன்று காரியங்களைச் சிறப்பாகச் செயல்புரிகின்றாள்.
அவள் விருப்பப்பட்டால் பரலோகத்தில் வசிக்கலாம். அவள் அருள்பார்வை இல்லையெனில், நம்மால் இவ்வுலகில் வசிக்க இயலாது.
ஒவ்வொரு பெண்ணும் அவள் உருவம் கொண்டவள், என்று பெண்மையைப் போற்றிப் புகழ்கின்றார்.
மகானின் உபதேசங்களின் படி நடந்தால், எவருடனும் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது











