பக்தர்கள் பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். குரங்கு மரம் விட்டு மரம் தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்..

இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகப் பிடித்துக் கொண்டால் குரங்கு போகும் இடத்திற்கெல்லாம் குட்டியும் போகும். அந்த வகையில் பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். இது குரங்குக் குட்டி வகை பக்தர்கள்.
குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டு விட்டு அம்மாவே பார்த்துக் கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும்.
அதைப் போல கடவுளிடம் நான் எதையும் கேட்க மாட்டேன். கடவுள் விட்ட வழி என்றும் என்னுடைய தேவையை கடவுளே பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையில் கடவுளை பூரண சரணாகதி செய்வது பூனைக்குட்டி வகை பக்தர்கள்.











