ஆடிமாததேய்பிறைஅஷ்டமி நீலகண்டாஷ்டமியாககடைபிடிக்கப்படுகிறது.
☘☘☘☘☘☘☘☘☘️
முக்கிய குறிப்பு : அஷ்டமி திதி நாளை மதியம் 1.39 pm க்கு ஆரம்பித்து வியாழன் அன்று 1.37 pm வரை இருக்கிறது இரண்டு நாட்களிலும் ராகு கால நேரம் வராது மாலை பூஜை வழிபாடு செய்பவர்கள் புதன்கிழமை மாலை வழிபடவும், ராகு கால பூஜையில் வழிபாடு செய்பவர்கள் வியாழக்கிழமை காலை 6.00 to 7.30 எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்யவும்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.
☘
#பைரவருக்குண்டானபொதுகாயத்ரி
☘
சுவாநத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்
☘
பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.











