உயிரும் மூச்சும் என் பிள்ளையான உனக்கே தருகிறேன்-ஸ்ரீ சாய் ராம்
போராடி போராடி ஓய்ந்து போய் விட்டதாக உணர்கிறாய் அல்லவா பயப்படாதே கலங்காதே,
தனியாக இருக்கிறாய் என்று, உன்னிடத்தில் தான் உன் மனதில் தான் நான் வசிக்கிறேன்.
உன் மனதில் உள்ள அனைத்து விதமான வலிகளும் துன்பங்களும் எனக்கு தெரியும்.
உனக்காக எல்லாம் சரி செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
ஒரு விஷயத்திற்காக போராடுகிறாய் முடிந்த வரையில் உன்னால் முடியும் என்று நினைத்து,
ஆனால் அதற்கான காரணங்கள்
தெரியாமலே அந்த விஷயத்தில் சோர்வை சந்திக்கிறாய்.
இது தானே உன் மனதில் உள்ள கவலை புலம்பாதே புலம்புவதால் எதுவும் மாற போவது இல்லை.
இதற்கு மேல் எப்படி என்னால் உழைப்பை போட முடியும் என்று உணரும் தருவாயில் முடியவில்லை என்ற எண்ணம் தோன்றும்.
நீ நிராயுதபாணியாய் நிற்பதை போன்று தவித்து மனதிற்குள் புழுங்கிக் கொள்ளாதே.
ஏதோ ஒன்று என் உழைப்பை உயர விடாமல் தடுக்கிறது என்னை, முடியாது என்று உணர தருவாய்க்கு கொண்டு வந்துவிட்டது என்று தோன்றும் நேரம்.
உன்னுடைய எல்லா பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்துவிடு நான் இருக்கிறேன் என்றும் உனக்காக நான் சுமக்கிறேன் உனக்கு.
மனதை பூ போன்று மென்மையாய் வைத்துக் கொள். எதுவும் பாதிக்கும் அளவிற்கு உன் மனதை பலவீனம் ஆக்கி கொள்ளாதே.
மாறுதல் காண நடைமுறைகள் தொடங்கி விட்டது, நீயும் மனதளவில் உன்னை தயார் செய்து கொள்.
புதிய வாழ்க்கைக்கு என் அன்பளிப்பு பாசமும், அருளும், அன்பும் ,உயிரும் மூச்சும் என் பிள்ளையான உனக்கே தருகிறேன்..
ஓம் ஸ்ரீ சாய் ராம்….











