ஒரு மனிதன் கடவுளிடம் கேட்டான்..
“என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது” என்று.
கடவுள் சொன்னார்,
நீ தங்கி இருந்த வீட்டினிடம் கேட்டுபார் என்றாராம்..
வீட்டின்அறைகள் அனைத்தும் பதிலும் சொன்னது…
மேற் கூரை சொன்னதாம்…
உன் எண்ணங்களை உயர்வாக வை என்று..!
காத்தாடி சொன்னதாம்..
என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று..!
கடிகாரம் சொன்னதாம்..
நேரத்தை மதிக்கனும் என்று..!
காலண்டர் சொன்னதாம்..
என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள் என்று..!
மணிபர்ஸ் சொன்னதாம்…
வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று..!
கண்ணாடி சொன்னதாம்..
உன்னை மட்டும் பார் என்று..!
விளக்கு சொன்னதாம்..
என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று என்று..!
ஜன்னல் சொன்னதாம்..
பரந்த மனப்பான்மையாக இரு என்று..!
தரை சொன்னதாம்..
எப்பவும் கீழே பணிவாக இரு என்று..!
படிக்கட்டு சொன்னதாம்..
வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை என்று..!











