சித்திரை மாத ராசி பலன்(14-04-2020 to 13-05-2020)
மேஷம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் சூரியன் இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சனி, குரு, செவ்வாய், விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உங்க ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இப்போது உள்ள சூழ்நிலையில் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் ஆன்மீக பயணம் செல்ல முடியலையே என்ற கவலை வேண்டாம். வீட்டிலேயே இறைவனை மனதார நினைத்து வணங்குங்கள். இந்த மாதம் நீங்க எதிர்பார்த்த பதவி உயர்வு சிறு தடைகளுக்குப் பின்னர் கிடைக்கும். சில விசயங்களில் அனுசரித்து செல்லுங்கள்.
திருமண சுப காரியங்கள் பேச இது ஏற்ற மாதம், சுபமாக முடியும். அதிகம் கோபம் வேண்டாம். பேச்சில் கனிவோடு பேசுங்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு மாறும் சூழ்நிலை வரும். மாத பிற்பகுதியில் செவ்வாய் இடம் மாறுகிறார். வீடு மனை வாங்க பேசி வைத்துக்கொள்ளலாம். தாய்மாமனுக்காக செலவு செய்வீர்கள் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். மகாலட்சுமியையும் மகா விஷ்ணுவையும் வணங்குங்கள்.
ரிஷபம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் விரைய ஸ்தானத்தில் சூரியன், ராசியில் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு, செவ்வாய், லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த மாதம் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். அப்பாவிற்காக செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமையாக பேசுங்கள் சண்டைகள் வேண்டாம் சமாதானமாக பேசுங்கள்.
விரைய செலவுகள் வேண்டாம் சிக்கனத்தை கடைபிடியுங்கள். சேமிப்பு இல்லாவிட்டால் மாத கடைசியில் பணத்திற்காக திண்டாட வேண்டியிருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். பங்குச்சந்தை, தரகு கமிசன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
அசையும் அசையா சொத்துக்களை வாங்குவதற்கு பேசலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்.
இந்த மாதம் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. பண விசயங்களில் சிக்கனமாக இருங்கள். சவால்களை சந்திப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அஷ்டமத்து சனி, குரு ஆட்டிப்படைக்கு உணவு விசயத்தில் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. சந்தோஷமாக இந்த மாதத்தை கடத்துங்க.
கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடைபெறும்.
திடீர் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க. வீட்லதானே இருக்கோம் நேரங்கெட்ட நேரத்தில சாப்பிடலாம்னு நினைக்காதீங்க. அது உங்க உடம்புக்கு நல்லதில்லை.
இப்போ இருக்கிற சூழ்நிலையில எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க அது உங்களுக்கும் நல்லதில்லை மத்தவங்களுக்கும் நல்லதில்லை. வியாபாரம் செய்றவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் சரக்குகள் விற்று தீரும்.
தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். திடீர் பணவரவு வரும். விஐபிக்கள் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.
சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் உடனே கவனிங்க. இந்த மாதம் உங்க நிதிநிலைமை நன்றாக இருக்கும். சேர்த்து வைத்த பணம் இப்படி செலவாகுதேன்னு நினைக்காதீங்க.
உங்களுக்கு பழைய கடன்கள் எல்லாம் திரும்ப கிடைக்கும். உங்களின் திறமை பளிச்சிடும். வீட்டில் இருந்தே செய்யக்கூடிய பிசினஸ் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். புதிய முதலீடுகள் எதுவும் செய்யாமல் இருப்பதை வைத்து சிறப்போடு லாபம் சம்பாதிப்பீர்கள்.
குடும்பத்தில் செல்வம் செல்வாக்குடன் சுபிட்சமாக இருப்பீங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.
உங்களுக்கு இந்த மாதம் பணவரவு சிறப்பாக இருக்கும். சூரியன் எட்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக இருக்கணும் கூடுமானவரைக்கும் வெளியே போகாமல் இருப்பது நல்லது.
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். உங்க பொருளாதார தேவைகள் பூர்த்தியடையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் வேண்டாம்.
வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.
இந்த மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. களத்திர ஸ்தானத்தில் இருந்து உச்சம் பெற்ற சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து போங்க.
அலைச்சல் வேண்டாம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வேலையில் எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் கிடைக்கலாம் இப்போது உள்ள சூழ்நிலையில் எங்கேயும் போக முடியலையே என்ற வருத்தம் ஏற்படும். பணம், விலை உயர்ந்த பொருட்களையும் கவனமாக பார்த்துக்கங்க. இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
சுய தொழில் செய்பவர்களுக்கு மந்தமான நிலையே ஏற்படும் கவனமாக இருங்க. பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். புதிதாக வீடு நிலம் வாங்க பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.
இந்த மாதத்தில் நீங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணவரவு பல வழிகளில் இருந்தும் வரும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு செய்ய வேண்டாம்.
நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது. நினைத்த காரியம் நிறைவேறும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு நிலம் வகையில் பணம் வரவு கிடைக்கும்.
அப்பா உடன் சச்சரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் சரக்குகள் அனைத்தும் விற்று தீரும். வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும்.
இந்த மாதம் பணவரவு அற்புதமாக இருக்கும். உங்க வார்த்தைகளில் கவனமாக இருங்க. கோபமாக பேசாதீங்க. வீட்ல விட்டுக்கொடுத்து போங்க. இந்த மாதம் சொத்துக்கள் வாங்கலாம் ஆனால் அதன் தாய் பத்திரம் மூல பத்திரங்களை கவனமாக பார்த்து வாங்கவும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும், பல நாட்களாக வராத பணம் கைக்கு வரும். இந்த மாதம் மகாவிஷ்ணுவை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
உங்க ராசியில் உள்ள கிரகங்கள் உங்களின் மன அழுத்தத்தை போக்கும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.
விஐபிக்களின் உதவி வீடு தேடி வரும். வெளியூர், வெளிநாடு போக வேண்டும் என்கிற எண்ணங்களை மூட்டை கட்டி வையுங்கள். உங்களின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.
வருமானம் அதிகம் வரும் கடன்கள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு இந்த மாதம் பணவரவு தாராளமாக இருக்கும். விரைய செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு நிறைய வருதே என்று அதிகம் செலவு பண்ணாதீங்க. அப்புறம் பணம் சேமிக்க முடியாம போயிரும்.
வேலையில் இருப்பவர்களுக்கு டென்சன் குறையும். பெரிய அளவில் பண முதலீடு செய்யாதீங்க. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.
உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். பாதிப்புகள் நீங்கி வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க நீங்க சனி பகவானை வழிபடுங்க.
உங்க குடும்பத்தில் இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபிட்சம் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் கோபமாக பேசாதீங்க. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் திறமையாக செயல்படுவீர்கள். சிலருக்கு தகுதிக்கேற்ற புதிய வேலை கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு பணம் வரவு வரும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினையாகிவிடும்.











