நவபுலியூர் யாத்திரையின் 3வது தலம் எருக்கத்தம்புலியூர்
இறைவன்: ஸ்ரீ நீலகண்டேசுவரர் எனும் திருக்குமாரசுவாமி
இறைவி : நீலமலர்கண்ணி
ஸ்தல விருட்சம்: எருக்கு
எருக்கத்தம்புலியூர் எனும் இராஜேந்திர பட்டினம், பதஞ்சலி முனிவருக்கு காட்சி கொடுத்த தலம் இதுவாகும். இது கேது பரிகாரதலம். இராஜராஜ சோழன் பரம்பொருளிடம் குழந்தை வரம் வேண்டி, அதன்பயனால் இராஜேந்திர சோழன் பிறந்ததால் இவ்வூருக்கு இராஜேந்திர பட்டினம் என்ற பெயர் வந்தது. முருகப்பெருமானுக்கு சாப விமோசனம் கொடுத்து பேச்சாற்றல் அருளிய தலம். அறுபத்து ழூன்று நாயன்மார்களின் ஒருவரான திருநீலகண்ட நாயனார் பிறந்த தலம். இந்த ஸ்தலம் விருதாசலத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புக்கு கணேச குருக்கள்: 94877 03524
நாளை நவபுலியூர் யாத்திரையின் 4வது தலமான ஓமாம்புலியூர் பற்றி பார்ப்போம்…











