இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.
மலை வளர் சிறகு கண்டேன்வாரிதி நன்னீர் கண்டேன்சிலை மதன் உருவு கண்டேன்சிவன் சுத்த களம் கண்டேன்அலை கடல் கடையக் கண்டேன்அயன் சிரம் ஐந்துங் கண்டேன்சிலை எரிஇரு கண் கண்டேன்கொடுத்ததை வாங்கக்கண்டேன்
இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.
இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.
தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.
2. பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
நந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால்புந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும்இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!
கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே ஏற்ற நந்திவரும் காலம் நலமாக வைக்கும் நந்திவணங்குகிறோம்
பிரதோஷ காலத்தில் பேசும் நந்திபேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்திவரலாறு படைத்து வரும் வல்ல நந்திவறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்திகீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்திவெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்திவிதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி
வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்திவியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்திசேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்திசெவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்திகுடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்திபொன் பொருளை வழங்கிடவே வந்த நந்திபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி
நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிதுநந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிதுசெந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிதுசிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது (நந்தி)
தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிதுஎல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிதுஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிதுவெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது
கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிதுநெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிதுஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது (நந்தி)
வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிதுகாணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிதுஉலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிதுநகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது (நந்தி)
(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு)
வழிவிடு நந்தி வழிவிடுவேவாழ்வில் நாங்கள் வளர்ந்துயரவழிவிடு நந்தி ! வழிவிடுவேவையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)
எம்பிரான் சிவனைச் சுமப்பவனேஎல்லா நலனும் தருபவனேஏழைகள் வாழ்வில் இருளகலஎன்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)
நீரில் என்றும் குளிப்பவனேநெய்யில் என்றும் மகிழ்பவனேபொய்யில்லாத வாழ்வு தரபொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)
உந்தன் கொம்பு இரண்டிடையேஉமையாள் பாகன் காட்சிதரதேவர் எல்லாம் அருள் பெற்றார்தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)
தேடிய பலனைத் தந்திடுவாய்தேவர் போற்றும் நந்திதேவா !வாழ்வில் வளமே வந்துயரவழியே காட்டி அமைந்திடுவாய். (வழிவிடு)
நந்தனார் போற்றும் நந்தி தேவா !நாலுந் தெரிந்த வல்லவனேஎம்பிரான் அருளை எமக்கருளஎன்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)
பிரதோஷம் என்றால் உன் மகிமைபெரிதும் வெளியில் தெரிந்திடுமேதேவர்க்குக் காட்சி உன்மூலம்தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)
பிரதோஷ காலத்தில் பேசும் நந்திபேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்திவரலாறு படைத்து வரும் வல்ல நந்திவறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்திகுடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்திபொன்பொருளை வழங்கிடவே வந்த நந்திபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்ஹர ஹர ஹர ஹர நமசிவாய – சிவாய நமஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய நமசிவாய – சிவாய நம
ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கராசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சிவநாமாவளிகள்
கைலாச வாசா கங்காதராஆனந்தத் தாண்டவ சதாசிவாஹிமகிரி வாசா சாம்பசிவாகணபதி சேவித்ஹே பரமேசாசரவண சேவித்ஹே பரமேசா
சைலகிரீஸ்வர உமா மஹேசாநீலலோசன நடன நடேசாஆனந்தத் தாண்டவ சதாசிவஹிமகிரி
நாதநாம மகிமை
போலோ நாத உமாபதேசம்போ சங்கர பசுபதேநந்தி வாகன நாக பூஷணசந்திரசேகர ஜடாதராகங்காதார கௌரி மனோகரகிரிஜா ரமணா சதாசிவா (போலோ)
கைலாசவாசா கனகசபேசாகௌரி மனோகர விஸ்வேசாஸ்மாசன வாஸா சிதம்பரேசாநீலகண்ட மஹாதேவா (போலோ)
சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசாவிபூதி சுந்தர பரமேசாபம் பம் பம் பம் டமருகநாதபார்வதி ரமணா சதாசிவா (போலோ)
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவைஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவேபண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவேஎண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவேஅண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே
அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே
பூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனேசெய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமேஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லைஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லைஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையேஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளேவிங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரேஎங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்சீற்றமான தம்பலம் தெளிந்ததே
விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே
உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோதிருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவைஉபாய மிட்டழைத்துமே சிவாய
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே
தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்துதலையாலே பலி தேருந் தலைவனைத்தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ – கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னைஎண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ – சிவன்எம்மிறை செம்பவளஎரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் – முதுகாடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய்.
நெஞ்சே நீ நினையாய் – நிமிர்புன்சடை நின்மலனைமஞ்சாடும் மலைமங்கை மணாளனைநெஞ்சே நீ நினைவாய்
கைகாள் கூப்பித்தொழீர் – கடிமாமலர் தூவி நின்றுபைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்கைகாள் கூப்பித் தொழீர்.
ஆக்கையால் பயனென் – அரன்கோயில் வலம்வந்துபூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்ஆக்கையாற் பயனென்
உற்றார் ஆருளரோ – உயிர்கொண்டு போகும்பொழுதுகுற்றாலத்துறை கூத்தனல்லால்நமக்குற்றா ராருளரோ.
இறு மாந்திருப்பன் கொலோ – ஈசன்பல் கணத்து எண்ணப்பட்டுச்சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்குஇறுமாந்திருப்பன் கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனும்தேடித் தேடொணாத் தேவனைஎன்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
நமச்சிவாயத் திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதிவானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்விடுக்கிற் பிரானென்று வினவுவோ
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடிநங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி உள்ளதுபல்லக விளக்கது
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்தன்னெறி யேசர ணாதல் திண்ணமேஅந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்நன்னெறியாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழநாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்துஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
திருச்சிற்றம்பலம்
2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையேஎன்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோஎன்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
இதுவுமது
3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடாகோனதேது குருவதேது கூறிடும் குலாமரேஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)
யோக நிலை
4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்துஅஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழுஎடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
தெய்வ சொரூபம்
6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்லமருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்லபெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்லஅரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)
தேகநிலை
7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)
அட்சர நிலை
8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)
இதுவுமது
9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலைநினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையைஅனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)
ஞானநிலை
10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனைபாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனைமிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனைமீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
ஞானம்
11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோகம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோஇன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோசெம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)
அட்சர நிலை
12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனைமவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)
பிரணவம்
13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) பஞ்சாட்சர மகிமை
14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவேநமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)
கடவுளின் உண்மை கூறல்
15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோஇல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதைஎல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)
அத்துவிதம்
17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)
அம்பலம்
18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சரம்
19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியேவெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதேஉண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிடநன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)
வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவேவைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)
புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனைவளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்.
2. ஓம் மஹா, ஈசா மகேசாபோற்றி போற்றிமனதினில் நிறைந்திடும் பசுபதியேபோற்றி போற்றி
3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வாபோற்றி போற்றிமூவா இளமையருளும் முக்கண்ணாபோற்றி போற்றி
4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளேபோற்றி போற்றிதிரு ஐயாறமர்ந்த குருபரனேபோற்றி போற்றி
5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்திருமுகமே போற்றி போற்றிஓம் உமையொருபங்கா போற்றி போற்றி
6. அதற்கு மோர்த்திருமுகமேபோற்றி போற்றி
7. ஓம் உலகமே நாயகனே லோகநாயகா போற்றி போற்றிஅகோரத்திற்கோர் திருமுகமேபோற்றி போற்றி
8. ஓம் உருத்திர பசுபதியேபோற்றி போற்றி
9. ஓம் உருத்திர தாண்டவ சிவனேபோற்றி போற்றி
10. ஓம் ஓம் அகோர மூர்த்தியேலிங்கமே போற்றி போற்றிஅதற்கு மோர்திருமுகமேபோற்றி போற்றி
11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்பாகா போற்றி போற்றிஅம்பிகைக்கோர் முகமே அம்பிகாபதியே போற்றி போற்றி
12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்டபரமனே போற்றி போற்றி
13. ஓம் சாம்பசிவ சதா சிவனேசத்குருவே போற்றி போற்றி
14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்புநாதா போற்றி போற்றி
15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி
16. ஓம் கங்காதரனே கங்களாபோற்றி போற்றி
17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்இறைவா போற்றி போற்றிஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180










