• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

புரட்டாசி மாத ராசி பலன் – 2018

siddharbhoomi by siddharbhoomi
September 16, 2018
in தமிழ் மாத ராசி பலன்கள்
0
புரட்டாசி மாத ராசி பலன் – 2018
2
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத ராசி பலன் 

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த

நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள்

புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும்

தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி

வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள்

பூமியில் தங்குவர். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின்

தாகத்தைத் தீர்க்க வேண்டும்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி

மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு

சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் கொலுவைத்து பூஜை செய்து அன்னையை வழிபடுகின்றனர்.

இந்த புரட்டாசி மாதத்தில் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால் உடலுக்கு ஏற்றவாறு உணவு கொள்ள வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் விரைவில் செரிமானம் ஆகாத அசைவ உணவை தவிர்க்கவே விரதம் வைத்ததாக ஒரு கருத்தும் உள்ளது. முன்னோர்களின் ஆசி கிடைக்கும் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம்.

நவகிரகங்களின் நிலை :-

சூரியன் : கன்னி ராசி

செவ்வாய் : மகரம் ராசி

புதன் : 2ம் தேதி கன்னி ராசிக்கும் 20ம் தேதி துலாம் ராசிக்கும் மாறுகிறார்.

குரு : 25ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.

சுக்கிரன் : துலாம் ராசி

சனி : தனுசு ராசி

ராகு : கடகம் ராசி

கேது : மகரம் ராசி

மேஷம் :-

மேஷம் சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும், அப்பாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் 2ம் தேதி முதல் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 20ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் குழந்தைகளால் மனக் கஷ்டம் ஏற்படும்.. சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.. சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.. ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் கவனம் தேவை.

ரிஷபம் :-

ரிஷபம் சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்,. பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகளில் பங்கு கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் 2ம் தேதி முதல் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனுடன் பிரச்சினை அதிகரிக்கும். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும் 20ம் தேதிக்குப் பின்னர் பண வரவு அதிகரிக்கும்.. சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு ஏற்படும், கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் ஏற்படும், மனதில் பாரம் அதிகரிக்கும்.. ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மிதுனம் :-

மிதுனம் சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கிடைக்கும், வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் மூலம் பண வரவு அதிகரிக்கும், சட்ட ரீதியாக மூலம் நிலம் வீடு கிடைக்கும்.. புதன் 2ம் தேதி முதல் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.. குரு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 25ம் தேதி முதல் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வீட்டினை அழகுபடுத்துவீர்கள், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், நண்பர்களுடன் நல்லுறவு நீடிக்கும்.. ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப மொத்த வருமானாம் அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கடகம் :-

கடகம் சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், சகோதரர்களால் நன்மை உண்டாகும்.. புதன் 2ம் தேதி முதல் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் 25ம் தேதிக்குப் பின்னர் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.. சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும், வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.. சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் ஏற்படும். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.

சிம்மம் :-

சிம்மம் சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பிரச்சினை உண்டாகும், உடன் பிறப்புகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.. புதன் 2ம் தேதி முதல் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாகப் பேசி காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 20ம் தேதிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாருடன் நல்லுறவு நீடிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் மனதில் அமைதி அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்படும்.. சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷய்ங்களில் ஆர்வம் அதிகரிக்கும், குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். . ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

கன்னி :-

கன்னி சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், அப்பாவின் அறிவுறை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.. புதன் 2ம் தேதி முதல் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் பண வருமானம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் மனதில் நினைப்பது நிறைவேறும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும், புதிதாக நகைகள் வாங்குவீர்கள்.. சனி நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள், விவசாயம் விருத்தியடையும். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் எண்ணங்கள் நிறைவேறும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

துலாம் :-

துலாம் சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், புதிதாக நிலம் வாங்குவீர்கள்.. புதன் 2ம் தேதி முதல் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் புத்தி கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், புதிதாக பொன்னகைகள் வாங்குவீர்கள். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம் :-

விருச்சிகம் சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும், அண்டை அயலாருடன் தகராறு உண்டாகும்… புதன் 02ம் தேதி முதல் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பின்னர் செலவுகளில் கவனம் தேவை. குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் மனதில் நிம்மதி உண்டாகும்.. சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும், மனைவியுடன் பிரிவினை உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும், பண வரவில் தடை உண்டாகும்.. ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.

தனுசு :-

தனுசு சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும், அப்பாவின் மூலம் நன்மைகள் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும், கோபமான பேச்சுகளை தவிர்க்கவும். புதன் 2ம் தேதி முதல் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் 20ம் தேதிக்குப் பின்னர் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.. குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 25ம் தேதிக்குப் பின்னர் நகைகள் வாங்குவீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப்பளு அதிகரிக்கும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.

மகரம் :-

மகரம் சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும், மனதில் எரிச்சல் அதிகரிக்கும். புதன் 2ம் தேதி முதல் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும், வியாபாரம் விருத்தியாகும்.. குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், 25ம் தேதி முதல் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், முயற்சிகள் வெற்றி பெறும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளியூர் தொழில் தொடர்புகள் சிறப்படையும். . ராகு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பிரச்சினையைத் தவிர்க்கவும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

கும்பம் :-

கும்பம் சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய பாக்கிகள் வந்து விடும், பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும்.. செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள், நிலம் வீடு போன்ற வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.. புதன் 2ம் தேதி முதல் எட்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகப்படுத்த வேண்டும் 20ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.. குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்,25ம் தேதி முதல் தொழில் நிலை மேன்மையடையுன்.. சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்திற்க்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம் :-

மீனம் சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும், உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.. செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் பண வரவு அதிகரிக்கும், சகோதரர்களால் நன்மை உண்டாகும்.. புதன் 2ம் தேதி முதல் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனின் உதவி கிடைக்கும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும், 25ம் தேதிக்குப் பின்னர் பண வரவு சரளமாக இருக்கும்.. சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.. சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.. ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன எண்ணங்கள் நிறைவேறும்.

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.

நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-

“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!

உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!

+91-7305018180

 

 

 

Previous Post

குரு முனியன் சுவாமிகள்(நிா்வாண சுவாமிகள்)-விளமல்,திருவாரூா்−மன்னாா்குடி

Next Post

பாம்பன் சுவாமிகள்

Next Post
பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »