1. மனித உறவுகள் விஷயத்தில் கவனமும், விழிப்புணர்வும் இல்லாது போனால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும்.
2. மற்றவர்களிடம் குறை அல்லது பிழை
காண்பதை ஒரு வழக்கம் ஆக்கி கொள் பவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது.
3. மற்றவர்களின் விமர்சனங்களை
எப்படி ஏற்று கொள்ள வேண்டும் என்ற
சரியான அணுகுமுறைகளை கற்றுக்
கொள்ள தெரியாதவர்கள் மகிழ்ச்சியாக
இருக்க முடியாது. அளவுக்கு மீறி விமர்சனங்களை பற்றி கவலை படுபவர்கள் கவலையை தான் வளர்ப்பார்கள் .
4. மிகையான கோபமும், வெறுப்பு யாரிடம் இருக்கின்றனவோ அவர்கள்
மகிச்சியை தியாகம் செய்ய வேண்டியது
தான்.மேற் கூறியவை குறிப்பிட்ட சில
உதாரணங்களே.மகிழ்ச்சிக்கு ஏதிரானவற்றை அடையாளம் கண்டு
அவற்றை ஒதுக்கினால் உண்மையான
மகிழ்ச்சி ஒளி தெரியும்.
5. அன்றாட வாழ்க்கையில் தவறுகளை
யும் தோல்வி களையும் , மகிழ்ச்சியற்ற
தன்மையும் சந்திப்பதுண்டு இதற்கு பொதுவான மூன்று காரணங்கள் அ) தன்ன
றிவின்றி செயல்படுவது ஆ) ஒரு இலட்சியத்திற்காக அல்லாமல் ஏனோ
தானோ என்று ஒரு காரியத்தை செய்வது
6. வாழ்க்கையை தெரிந்து கொள் , உணர்ந்து கொள், தெரிந்த உண்மைகளை
மீண்டும், மீண்டும் நினைவுக்கு கொண்டு
வந்து அவற்றை மனதின் ஒரு பகுதி ஆக்கு
பிறகு ஆழ்ந்து சிந்தனை செய் .சிந்திக்கின்ற
மனம் தெளிவு பெறுகிறது.மனதெளிவு
பெற்றவனுக்கு தனது நோக்கம் என்ன அதை அடைவதற்கு எந்த வழியில் செல்ல
வேண்டும் என்பவை சந்தேகத்திற்கிடமின்றி தெரிகின்றன.
சாதகமானவற்றை ஏற்றுக்கொண்டு செயல் படுகிறான், மகிழ்ச்சி அடைகிறான்
வெற்றி காண்கிறான்.
குருவின் வழியில் நடப்போம்











