தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது, வளர்ந்து வரும் நகரமும்கூட. திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது ;
வள்ளியூர் , திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலை இணைக்கின்றது, முருகனின் மனைவியாகிய வள்ளியின் பெயர் இவ்வூருக்குவழங்கபட்டுள்ளது .அழகான முருகன் கோவில் ,
வள்ளியூர் மலை, மற்றும் மேற்கு தொடர்சி மலையும் இவ்வூரை மிகவும் அழகுபடுத்துகிறது.
சுந்தர காண்டத்தில் குறிபிட்டுள்ள மகேந்திரகிரி மலை இந்த ஊரில் தான் அமைந்துள்ளது.இந்த மலையில் தான் முனிவர் பரசுராமர் தவத்தில் ஈடுபட்டார். வள்ளியூர் ஏரியே சீவலபேரி ஏரி என்று அழைக்கபடுகிறது. திருப்புகழில் அருணகிரிநாதர் வள்ளியூரை பற்றி எழுதியுள்ளார்.
1162-1173இல் வள்ளியூர் பாண்டிய ராஜனின் தலைநகரமாக விளங்கபட்டுள்ளது. வள்ளியூர் முருகன் கோவில் மிகவும் சிறப்புவாய்ந்தது. பூர்ணகிரி என்ற மலையை குடைந்து கட்டபட்டது. இக்-கோவில் ஓம் வடிவத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தென்புறம் சரவண பொய்கை என்ற தெப்பக்குளமும், கீழ்புறம் கார்த்திகை மாத தெப்பத்திருவிழாவுக்கான தெப்பக்குளமும் அமைந்துள்ளன.
இதில் சரவண பொய்கை தெப்பக்குளமானது பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் போது அமைக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது.










