சிவ சிவ திருச்சிற்றம்பலம்
திருவாசகம்.
மாணிக்க வாசகர் பெருமான்
18. குயில் பத்து
வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய்.
உரை: குயிலே!கூவும் இசைப் பிள்ளையே!
நீ இங்கே வாயேன்.
உனக்கு தெரியுமா முன்னொரு காலத்தில் பிரம்மா ,விஷ்ணு இருவருக்கும் இடையில் யார் சிவனாரை முதலில் காண்பது என்று போட்டி.
இருவராலும் இயலவில்லை. அடி,முடி காண இயலாது திகைக்க மிக பிரம்மாண்டமான ஒரு பேரொளி இது என்ன என்று வியந்து இருவரும் வணங்கினர்.
அந்த ஒளி மலையானது வானை பிளந்து மேலே மேலே சென்றது.
அண்டங்கள் கடந்து எங்கும் பரவிய பேரொளிச் சுடரே அண்ணாமலையார்.????????
இடம் திருவண்ணாமலை திருத்தலம்.
குதிரை மீது தாவி வந்த சுந்தரன்.
நீண்ட அழகிய சடையுடைய அழகனை நீ இங்கே வருமாரு அழைப்பாயாக.
ஒண்தழலாகப் பெருமான் தோன்றிய இடம் திருவண்ணாமலை. சுடர் என்றது தழலினின்றும் தோன்றுவது ஆதலின், தழலாய் ஓங்கிச் சுடராய் நின்றான் என்றாள். ‘சுடர் விட்டுளன் எங்கள் சோதி’ என்றார் திருஞானசம்பந்தர்
சிவ சிவ திருச்சிற்றம்பலம்????????











