இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
ஒரு உறவில்… உங்களுடைய சந்தோஷம் முழுவதும் இன்னொருவரைச் சுற்றி இயங்க ஆரம்பித்தால்… அது அன்பு இல்லை.
அது Emotional Dependency.
ஒரு Message வந்தா, சந்தோஷம்.வரலன்னா, மனம் உடைஞ்சிடும்.
ஒருவர் நல்ல Mood-ல இருந்தா…உங்களுக்கும் நல்ல நாள்.
அவர் கோபமா இருந்தா…உங்களோட நாளும் கெட்டுப்போயிடும்.
கவனிச்சு பார்த்தீங்களா…?உங்களோட மன அமைதி, கொஞ்சம் கொஞ்சமாக உங்க கையிலிருந்து… இன்னொருத்தர் கைக்கு போயிடுச்சு.
அதுதான் Emotional Dependency.
ஆனா…ஒரு ஆரோக்கியமான உறவில், அன்பு இருக்கும். அக்கறை இருக்கும்.புரிதல் இருக்கும்.
ஆனா…உங்களுடைய மன அமைதி உங்களிடமே இருக்க இருக்கும்.
இதுதான் Emotional Self-Regulation.
Emotional Self-Regulation அப்டீன்னா என்ன ?
அவர் Reply பண்ண Late ஆனாலும், நீங்கள் உங்களையே அமைதிப்படுத்த தெரியும்.
ஒரு சண்டை வந்தாலும்…உடனே முடிவெடுக்காமல்…
உணர்வுகளை சமாளிக்க தெரியும்.
அவர் ஒரு நாள் Busy-ஆ இருந்தாலும்…உங்களுடைய நாள்…
உங்களுக்காக தொடர்ந்து நகரும்.
ஏன்னா…உங்களுடைய சந்தோஷம் ஒரே ஒருவரை மட்டும் சார்ந்து இருக்காது.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையும் சந்தோஷமும் இன்னொருவரைச் சார்ந்து இருக்க கூடாது.
உங்களை உணர்வளவில் வலிமையாக்கி கொள்ளவேண்டும் .
அன்பு என்பது…ஒருவரை பிடித்துக்கொண்டு வாழ்வது இல்லை.
ஒருவரை நேசித்துக்கொண்டே… உங்களையும் இழக்காமல் இருப்பது.
அதுதான் Emotional Maturity.
The One Percent Extra
இன்றைய 1% Extra:
அடுத்த முறை…
உங்கள் மனநிலை ஒருவருடைய செயலால் பாதிக்கப்படும்போது…
இந்த ஒரு கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.
“இப்போ நான் அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறேனா… இல்ல என்னுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேனா?”
அந்த ஒரு கேள்வி
உங்களை Emotional Dependency-லிருந்து, Emotional Freedom-க்கு அழைத்துச் செல்லும்.
வாழ்க்கையை மாற்ற பெரிய மாற்றங்கள் தேவையில்லை.
சித்தர் பூமி WhatsApp: +91-7305018180










