கொடுக்கும் மனம் படைத்தவரே, இவ்வுலகில் பெரும் செல்வந்தர்.
பகையை வளர விடாதே., அன்பை தளர விடாதே .
துர்குணம் துயரில் தள்ளும்., நற்குணம் துயரை வெல்லும்.
சலிப்பின்றி உழைத்திடு., சகித்து வாழ்ந்திடு.
உன் ஒரு பக்க தோல்விதான்.,
மறுபக்க வெற்றியாக மலர்கிறது.
மேகத்திற்கு மேலே மழை இல்லை.,
ஆசை துறந்தால் துயரமில்லை.
வசந்தத்தில் சேமிப்பவருக்கு, வறட்சியும் வசந்தமே.
தனது கனவை நிஜமாக்கும் சத்தி, மானிட மனதிற்குண்டு.
தனக்காக வாழ்பவர் மனிதன்., பிறருக்காக வாழ்பவரே புனிதன்.
மகிழ்வித்து மகிழ், உணவளித்து உண், கொடுத்து உதவு
உன் உள் அடைப்பு நீங்கின், உனக்குள் ஆனந்த பரவசம் உருவாகும்.
தாராளமாய் கொடு., தாராளமாய் பெறுவாய்.
மாற்ற முடியாத பழக்கமில்லை., மீள முடியாத துயரமுமில்லை.
ஆசை வறுமை., அன்பே வளமை
ஆசை வறுமை., அன்பே வளமை
குறைந்த வசதியில், நிறைந்த மகிழ்ச்சியுடன் நீ வாழ்ந்திரு.
எதிலும், ஆரம்ப அமர்க்களத்தை கண்டு ஏமாறாதீர்
உனக்கான ஒரே நிரந்தர உறவு “கடவுள்” மட்டுமே.
கல்லில் சிற்பம்போல், உன்னில் கடவுள்.
வாய்மையால் அகத்தையும், தூய்மையால் புறத்தையும் காத்திடுக.
சிறு சிறு முயற்சிகள், ஒரு நாள் பெரு முயற்சியாய் வளரும்.
உன் குறைகளை எது களையுமோ, அதனோடு நீ உறவாடு.
பிறரை வாழ்த்திப் பேசுவோம்., சிறப்பாய் வாழ்ந்தும் காட்டுவோம்.
நீ எங்கு சென்றாலும், அங்கு உன் செயல்களே உனக்கு சாட்சி சொல்லும்.
கடனாளியாய் இருப்பது வேதனை., கொடையாளியாய் இருப்பதே சாதனை.
உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவெடு., பொறுப்புணர்வுடன் செயல்படு.
ஆசையை துறப்பதும்,
அன்பை ஏற்பதுவுமே தைரியம் மற்றும் வீரமாகும்.
அன்பு, அறிவு, ஆற்றல் இம்மூன்றும் ஆளுமைக்கு அவசியத் தேவைகள்.
பிறர் வாழ்த்தும், சாபமும் நிச்சயம் பலிக்கும்.
பிறப்பில் எதுவும் சிறப்பில்லை., வாழ்வதில் அதை நிரூபித்து காட்டு.
இன்றைய சேவகன், நாளைய கேசவன் [கடவுள்].
தோற்பவர் காரணம் சொல்வார்., வெல்பவர் காரியம் செய்வார்.
உலகம் பண்படும் களம்., பண்படும் உயிர்களுக்கே “விடுதலை”.
பலன் தராத, விளைவை விளைவிக்காத செயல் என்று எதுவும் இல்லை.
ஆசை அலைகளின் கொந்தளிப்பு., அன்பே ஆழ்கடல் அமைதி
நெஞ்சில் நேசமிருந்தால், எதுவும் மோசமாய் தெரியாது
சிந்தனை திறன், அறிவு திறன், செயல் திறனால் சாதனை மலர் மலரும்.
கவலை, துயரிலிருந்து விடுபட விரும்பினால், பற்றை துறந்திடுக
உன் பணம், பதவி, அதிகாரத்தை நல்லது செய்ய பயன்படுத்து
துன்பத்தில் துவங்கி எது மகிழ்வில் முடிகிறதோ, அதுவே சன்மார்க்கம். பொறுத்திரு.,
சில நோய்கள் மருந்தில்லாமல் தானாகவே குணமாகும்.
உனக்கு பிடித்ததெல்லாம் நல்லதல்ல., பிடிக்காதது கெட்டதுமல்ல.
இயற்கையின் ஒருபக்கம் ரம்மியமானது., மறுபக்கம் ரண கொடூரமானது.
ஆத்மா அழிவற்றது.,
நம் உடலும், மனமும் நிலையற்றது.
பிறர் துயருக்கு வருந்துதல் அன்பு., உதவுதல் பேரன்பு
நம் செயல் சரியாக இருந்தால், அதன் பலனும் சரியாகவே இருக்கும்.
துரிதம், தூய்மை மற்றும் நேர்மையை உன் செயலில் கடைப்பிடி.
சுக போகத்தில் நலனில்லை., கஷ்ட நஷ்டத்தில் கேடில்லை.
வாழ்வின் எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு “நல்வாழ்வு”.
நல்ல லட்சியத்தை அடைய, குறுக்கு வழி ஒரு போதும் உதவாது.
கொஞ்சமாய் செல்வத்தை தேடு., அதிகமாய் ஞானத்தை தேடு.
வசதியில் தான, தர்மம் செய்.,
கஷ்டத்தில் கடவுள் சிந்தனை செய்.
வியாதியும், மருந்தும் கடவுளின் பெரும் கொடையாகும்.
விவேகத்துடன், வேகம் கலந்து செயல்படு., வெற்றி பெறு.
தான, தர்மம் செய்வதே சேமிப்பில் சிறந்த சேமிப்பு.
பிறரின் அவசர, அவசியத்திற்கு உதவுவது பேருதவியாகும்.
எப்படி வாழ வேண்டும் என்பதை, உலகம் உன்னை பார்த்து அறியட்டும்.
முழு பாவி, முழு புண்ணியவான் என்று ஒருவரும் இல்லை.
ஆசையின்றி வாழ முடியாது., அன்பின்றி மீள முடியாது.
நன்னடத்தையே நல் வழிபாடு., நம்பிக்கையுடன் இறை வழிபடு.
நீ உயரம் தொடுவதும், வலிமை பெறுவதும் துயராலே.
நமக்கிருக்கும் ஒரே கடைசி பாதுகாப்பு கடவுள் மட்டுமே.
இன்பம் எதுவும் வெளியே இல்லை; துன்பம் எதுவும் உள்ளே இல்லை.
தாக்குப்பிடி., பிறரையும் தாங்கிப்பிடி.
முயற்சியும், தேடலுமின்றி அமிர்தம் கிடைத்தாலும் அது வீணே.
எளிமையே ஏற்றம்., அது தான் உனக்கு அழகும், ஆனந்தமும்.
‘தாழ்மை’ எவரையும் தாழ்ந்து போக விடுவதில்லை.
அன்னம் உடல் வளர்க்கும்., எண்ணமே மனம் வளர்க்கும்.
பிறரை மகிழ்வித்து, மகிழ்வது உத்தமம்.
‘செல்’ நோண்டி நேரம் போக்காதே., மண் நோண்டி பல மரம் நடு.
தெய்வீகத்தை வெளிப்படுத்த, உன்னை விட சிறந்த நபர் வேரு யார்?!
வாழ்க்கை மகத்துவம் நிறைந்தது.
, ‘நேரமோ’ விலை மதிப்பற்றது.
பிரச்சனை எதுவும் தானாக வருவதில்லை., தானாக போவதுமில்லை.
அமைதிக்காக உழைப்பவர், மனிதருள் மாணிக்கமாவார்.
அமைதிக்காக உழைப்பவர், மனிதருள் மாணிக்கமாவார்.
கதிரவனையும், காற்றையும் போல் நீ பெரும் கொடையாளியாய் இரு.
தம் தவறை திருத்திக்கொண்டால்,
“நற்பாக்கியம் உண்டாகும்”.
அமைதியும்,
ஆரோக்கியமுமே நற்பாக்கியம்.,வெறும் பணமல்ல.
கடவுள் நம்மை விட்டு பிரியவில்லை.,நாம் தான் பிரிந்திருக்கிறோம் .
சுய கட்டுப்பாடே சுதந்திரம்., சுதந்திரமே சுக வாழ்வு.
வாழ்வு சிறைச்சாலை போன்றது., நல்வாழ்வு நம்மை விடுதலையாக்கும். உன் வாழ்வு உன் பொறுப்பு., வேண்டாம் எதன் மீதும் வெறுப்பு.
கர்மமும், காலமும், நாமும் கடவுளின் மறு ரூபங்கள்.
நன்னெறி பாதை துயர் நிறைந்தது., எனினும்,துணிந்து முன்னேறுக.
எல்லாம் இருந்தும் துயர்படுவதைவிட, எதுவுமின்றி மகிழ்ந்திரு.
துன்பம் எல்லாம் செயற்கையானது., பேரின்பமே இயற்கையானது.
ஏற்ற, தாழ்விற்கு அவரவர் கர்மமே காரணம்., கடவுள் அல்ல.
கெட அல்ல., திருந்தவே, உயரவே இங்கு வாய்ப்புகள் அதிகம்.
எப்பாடு பட்டாவது காம, குரோதத்தை நீ வென்றிடு.
அன்பை அறியாத, நன்மை செய்யாத வெறும் அறிவால் என்ன பயன் ?! “கடன்மயம்” நவீன உலகின் பெரும் சாதனை?!
இத்தனை துயரும், அவலமும் நம் ஆத்ம சுத்திகரிப்புக்கானது. –
பிறப்பு ஏற்றத்துக்கானது., இறப்பு மாற்றத்துக்கானது.
பொறுப்பு தகுதியை தரும்.,தகுதியே வெற்றியை தரும்.
வாழ்க்கை ஒருவகை மயக்கம்., விரைவில் விழித்தெழு.
பயத்தில் அன்பில்லை., அன்பில் பயமில்லை.
காம சிந்தனை கொல்லும்., கடவுள் சிந்தனையே வெல்லும்.
துயருக்கு முடிவுரை எழுது., அக மகிழ்விற்கு முகவுரை எழுது.
பிறப்பின் அர்த்தம் புரிந்தால்தான், சாவின் மர்மம் விலகும்.
நம் செயல்களால் வரம்-சாபமாக மாறும்.,சாபமும் வரமாக மாறும்.
நீந்தக் கற்பது போல், வாழ கற்பது கலையாகும்.
அன்பிற்கு வசப்படாத உயிர்கள் ஒன்றுமில்லை.
மனித நேயத்துடன் இருப்பதே, மகத்துவம் பெற சுலப வழி.
நிழலின் அருமை வெயிலிலும், அமைதியின் பெருமை துயரிலும் தெரியும்.
அசாதாரணம் எல்லாம், சாதாரணமாகவே இருக்கும்.
துயரம் என்று விரக்தி அடையாதே., வீரம் பெறு, உறுதி அடை.
நம்பிக்கை வாழ்வளிக்கும்., அவ நம்பிக்கை வாழ்வை அழிக்கும்.
பலன் கருதாத, புகழ் விரும்பாத செயலுக்கு “கடவுளே பரிசு”.
இலக்கை தீர்மானி,
தீர்மானத்தில் உறுதியாயிரு.,
“வெற்றி உனதே”.
பற்றில்லாதது கடவுளை சேரும்., பற்றுல்லது உலகையே சேரும்.
ஒரு நொடியில் எல்லாம் மாறும்., ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக மாற்று. –
அளவுடன் பேசு, அளவுடன் பழகு, அளவுடன் உறவாடு.
எந்நிலையிலும் தன்னிலை இழக்காதே., உன் தைரியத்தையும் தான்.
உலகின் உன்னத பூ அன்(பூ)பு., சிறந்த பூ சிரிப்(பூ)பு.
தர்ம சிந்தனை கொண்டிரு., மனதை அன்பால் நிரப்பு.
வில்-அம்பு சாதிக்காததை, சொல்-அன்பு சாதிக்கும்.











