மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
என ஒரு ஞானி கூறுவதை கவனியுங்கள்.
பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் எல்லா மனிதர்களையும் வகையாக அடுக்கி விடலாம் எனப் பட்டியல் தருகிறார்.
அவற்களை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி
பேராசைக்காரன் – எல்லாமே என்னுடையது என்னுடையது.
சராசரி மனிதன் – உன்னுடையதும் என்னுடையது என்பான்.
உத்தமன் – உன்னுடையது உன்னுடையது என்பான்.
ஞானி – எல்லாமே இறைவனுடையது என்பானாம்.










