முகுள முத்திரை💫
🌹- முகுள முத்திரை மிகவும் எளிதான முத்திரை. முக்குலம் என்றால் பறவையின் அலகு என்று பெயர் .
இந்த முத்திரைக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி அதிகம் உள்ளது .
இந்த முத்திரை செய்யும்போது முத்திரையின் சக்தி எந்த உறுப்புகள் அதில் வைக்கிறோமோ அந்த உறுப்பின் உள்ள பகுதியை நோயை நீக்குகிறது.இந்த முத்திரை சக்தி கொடுக்கும் முத்திரை என்றும் மன இறக்கத்தை அகற்றும் முத்திரை என்றும் சொல்வார்கள்.
💫செய்முறை💫
🌹- நமது கையின் நான்கு விரல்களையும் பெரும் விரலோடு இணைத்து வைத்துக்கொள்ளவேண்டும். விரல்கள் அனைத்தும் மேல் நோக்கி இருக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் .மூச்சுப் பயிற்சியின் இறக்க வேண்டும். அதாவது விசுவாசம் ஒரே சீராக இருக்க வேண்டும்.இந்த முத்திரைப் பயிற்சியை இரண்டு கைகளும் செய்யலாம்.
🌹- இந்த முத்திரை உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்தால் அப்பகுதிக்கு சக்தி செலுத்தப்படும் அங்குள்ள நோய்கள் பிரச்சினைகள் குணமடையும். அதாவது நம் உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் முகுள முத்திரை பயிற்சியுடன் கையை வைக்க வேண்டும் .
நல்ல சுவாச பயிற்சியின் இருக்க வேண்டும். அப்போது முக்குல முத்திரையால் ஏற்படும் சக்தி பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அதனுடைய கோளாறுகள் நீங்கும் உடலில் எங்காவது வழி இருந்தால் அந்த இடத்தில் முகுள முத்திரை வைக்க வேண்டும். நமது கவனம் முழுவதும் வலியுள்ள இடத்தில் இருக்க வேண்டும் .சிறிது நேரத்தில் வலி நீங்கிவிடும் .
🌹-இந்த முத்திரைப் பயிற்சியை குறைந்தது ஐந்து நிமிடங்களும் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 5 நிமிடங்கள் வீதம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். இந்த முத்திரைப் பயிற்சியை உட்கார்ந்து கொண்டோ நின்று கொண்டோ செய்யலாம்.
🌹-சிறுநீரக கோளாறுகளுக்கு முதுகுப் பகுதியின் கடைசி விலா எலும்புக்கு சற்று கீழாக இந்த முத்திரைப் பயிற்சியை வைக்கவேண்டும்.
🌹- வயிறு;குடல்; சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இடதுகையில் முகுள முத்திரை தொப்புளின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.வலது கையில் முகுள முத்திரை பயிற்சியுடன் தொப்புளை சுற்றி வைத்துக் கொண்டே வரவேண்டும்.
🌹- கல்லீரல் பித்தப்பை கோளாறுகளுக்கு நெஞ்சு எலும்பின் கீழ்ப்பகுதியில் இடது கையில் முத்திரையை வைக்கவேண்டும். வலதுகை முத்திரையை வலது விலா எலும்புகளின் மீது வைத்துக் கொண்டு வரவேண்டும்.
🌹- கணையம் மண்ணீரல் நோய்களுக்கு நெஞ்சு எலும்பின் கீழ்ப் பகுதியில் வலது கையை முத்திரைப் பயிற்சியை வைத்துக்கொள்ளவேண்டும்.
இடது கையால் இடது விலா கீழ்ப்பகுதியை இந்த முத்திரை பயிற்சி வைத்து
கொண்டே தொடவேண்டும்.
💫நல்ல விளைவுகள்💫
🌹- உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது;
🌹- உடலின் எயங்கு சக்தி தேவைப்படுகிறதோ அந்த பகுதிக்கு சக்தி கிடைக்கும்.
🌹-உடலில் எந்த இடத்தில் பாதிப்புகள் நோய்கள் இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும்.
🌹-மன அமைதி உண்டாகும்.
🌹- மனக்கவலை மன இறுக்கம் நீங்கும் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தும் சக்தியாக விளங்குகிறது.
🌹-இது சக்தி கொடுக்கும் முத்திரை.
🌹- இது மன இறுக்கம் மனக் கவலை போக்கும் முத்திரை.
🌹-நமது உடல் பஞ்ச பூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது
காற்று,நெருப்பு,
நீர்,பூமி,ஆகாயம்; என்பன இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலை இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப் படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரை பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
🌹-நமது ஐந்து விரல்களும் பஞ்ச பூத சக்திகளைக் குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும்; ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும்: நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும்; மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும்; சிறுவிரல் நீரின் சக்தியாகவும்; செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலை படுகிறது அதனால்; அதற்குரிய நோய்கள் குணமடைகிறது முத்திரை பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் சக்தியை அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.
🙏 ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் ஓம் ஸ்ரீ அகத்திய சித்தரே போற்றி🙏
வாழ்க வளமுடன்🙏🌸











