அன்பான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது.
*நான்* காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
*நீ* நெருப்புப் புகையோடு
போராடிக் கொண்டிருக்கிறாய்.
*நான்* பல் துலக்குகிறேன்
*நீ* பாத்திரங்களை
புதுப்பிக்கிறாய்.
*நான்* செய்தித்தாளில்
செய்திகளை சேகரிக்கிறேன்.
*நீ* வீட்டில் குப்பைகளை
பெருக்குகிறாய்.
*நான்* உடலை சுத்தம் செய்கிறேன்.
*நீ* ஆடைகளின் அழுக்குகளை
பிரித்துக் கொண்டிருக்கிறாய்.
*நான்* பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.
*நீ* பாத்திரங்களை
நீரால் நிரப்புகிறாய்.
*நான்* அலுவலகம் கிளம்புகிறேன்.
*நீ* பிள்ளைகளை
சீருடையில் அனுப்பி விட்டு என்முறைக்காக காத்திருக்கிறாய்.
*நான்* இரவு வீடு திரும்புகிறேன்.
*நீ* இன்னும் திரும்பவில்லை
சமையலறையிலிருந்து.
*நான்* தூங்கச்செல்கிறேன்.
*நீ* கதவின் தாழ்ப்பாள்களையும்
எரியும் மின்விளக்குகளையும்
பிள்ளைகளின் போர்வைகளையும்
சரிபார்த்து விட்டே
படுக்கையில் விழுகிறாய்.
ஒவ்வொரு ஞாயிறுகளும்
ஒவ்வொரு பண்டிகைகளும்
எங்களுக்கு ஓய்வு நாட்கள்
*உனக்கு?*
உறவு வீட்டு விழாக்களில்
எங்களிடத்தில் *நீ!*
கல்விக்கூடங்களின்
கேள்விகளுக்கான பதில் *நீ!*
சோக நிகழ்வுகளிலும்
கண்ணீர் சிந்திய படி *நீ!*
எங்களின் பிரதிநிதியாக
கோவில்களிலும் *நீ!*
என் வாழ்க்கைத்தோழியே!
இப்போதெல்லாம்
” நான் வேலைச்செய்கிறேன்”
என்று சொல்லவே
தயக்கமாக இருக்கிறது
கழிந்தப் பொழுதின்
உன் ஒற்றைப் பதிலால்..
*மனைவியை நேசிப்போம்,..*











