அசைவம் சாப்பிடலாமா..!
அசைவம் சாப்பிடலாமா கூடாதா?
ஆன்மிக வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு வரும் அவசியம் உணர்ந்து கடைபிடிக்க வேண்டியது.
இறை நம்பிக்கை உள்ளவர்கள், ஆன்மிகத்தில் வளர விரும்புபவர்கள்
அசைவம் சாப்பிடலாமா…??
அசைவம் சாப்பிடலாமா கூடாதா..???
இந்த கேள்வியை
கேட்காத மனிதர்கள்
இல்லை, இதற்கு
பதில் தராத
குருவும் இல்லை
ஆயினும் கேள்வி தொடர்கிறது….
என் குருநாதர் அவர்களுடன் இதுபற்றி ஆழமாக உரையாடும் போது அவர் எனக்கு சொன்னதை உங்களுக்கு சேர்ந்த பூ மங்களம் கைலாசநாதர் கோவில் வாட்சப் குரூப் வாயிலாக பகிர்கிறேன்…
பதில்
உணவுக்கும்
இறைவனுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை..
அசைவ உணவு சாப்பிட்டால் கடவுள் கோபிப்பார் என்பதற்க்கும்
எந்த சம்மந்தமும் இல்லை…
விரதமில்லாமல் ஆலயம் சென்றால் கடவுள் தண்டிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை…
ஆனால் உணவுக்கும்
உடலுக்கும்
சம்மந்தம் உண்டு..
உணவுக்கும்
கர்மாவிற்கும்
சம்மந்தம் உண்டு…..
உணவுக்கும் நம் குணத்திற்க்கும்
சம்மந்தம் உண்டு…..
உணவுக்கும் நம் வாழ்விற்க்கும்
சம்மந்தம் உண்டு…..
உணவுக்கும் நம் ஆயுளுக்கும்
சம்மந்தம் உண்டு…..
உணவுக்கும் நம் மனதிற்க்கும்
சம்மந்தம் உண்டு…..
அப்படியானால்
மனதிற்கும்
இறைவனுக்கும்
சம்மந்தம் உண்டு….
பாவத்தின் காரணமாக
பிறவி எடுத்தவன் மனிதன்..
அந்த பாவத்தை சரி பண்ணவே இந்த
மனித பிறவி மானுட ஜென்மம்…
அவன் சொந்த கடனை (பிறவி கடனை)
அடைப்பதே அவனுக்கு திண்டாட்டமே!
இதில் தாவர உயிரினங்களுக்கு
பாவ கணக்கு குறைவு.
மாமிச உயிரினங்களுக்கு
பாவ கணக்கு அதிகம்.
எந்த உணவை
மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த
மனிதனே அடைக்க வேண்டும்.
ஒரு கோழியை அடித்து சமைத்து ஒருவர் சாப்பிடுகிறார் என்றால்
அந்த கோழி முன் ஜென்ம பாவத்தை கழிக்கவே இப்பிறவியில் கோழியாக பிறந்துள்ளது அந்த பாவத்தை அந்த உயிர் கழிக்கும் முன்பே!
மனிதனாகிய நீ அதை அடித்து சாப்பிட்டால் உன் பாவக்கணக்கோடு அந்த (கோழி)பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டும்
அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை
மனிதன் உண்பது
பாச தோஷம் ஆகும்.
அம்மாவை தேடிஅலையும்
குஞ்சுகள் குட்டிகள்
ஆனால் அதன்
தாயை கொன்று தின்னும்
மனிதன் உணர
வேண்டியது
தாயின் மனம் அந்த குட்டியின் மனம்
எவ்வாறு தேடி தவித்து இருக்கும் அந்த தோஷத்தை மனிதன்
அடைந்தே தீருவான்
அந்த பாவத்தையும் சேர்த்து அடைக்க
ஒருவன் தைரியமாக முன்வந்தால்
அவன் தாராளமாக
அசைவம் உண்ணலாம்
இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???
ஒருவர் வங்கியில்
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்
இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை
கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.
சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல.பிறந்த பிறவிக்கும் நல்லதே
அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால்…
காட்டில் கூட ஆடு மாடு
யானை குதிரை ஒட்டகம்
இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே
மிருகமாகிறது.
சைவ உண்ணிகளுக்கு
மிருகம் என்ற பெயர்
காட்டில் கூட இல்லை..
உடலால் மனித பிறவி சைவம்…
உயிரால் மனித பிறவி சைவம்…
குணத்தால் மனித பிறவி
அசைவம் மற்றும் சைவம்.
ஆடு மாடு மான் யானை
போன்றவை
உடலால் சைவம்
உயிரால் சைவம்
மனதாலும் சைவம்.
மனித பிறவியின் உணவு
சைவமாக இருத்தலே தர்மமாகிறது
என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள்
மனித பிறவிக்கு
சிறந்தது சைவம்
என வழிகாட்டி சென்றார்கள்.
இந்த பதிவை படித்து நீங்கள் ஆழமாக சிந்தித்து பார்த்தாலே போதும்….











