• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பல நன்மைகள் நம்மை தேடி வரும்.

siddharbhoomi by siddharbhoomi
October 1, 2021
in ஆன்மிகம்
0
பல நன்மைகள் நம்மை தேடி வரும்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பல நன்மைகள் நம்மை தேடி வரும்.

புரட்டாசி மாதத்தில் 3 விஷயங்களை செய்தாலே போதும்.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த 3 விஷயங்களை செய்தாலே போதும். நீங்கள் செய்த பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.

மனிதர்களாக பிறவி எடுத்தவர்களுக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. தங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால்,

தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது தவறு நடந்துவிட்டால், அதற்கான பழியை தூக்கிப் அடுத்தவர்களின் மேல் போடுவது. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நாம் செய்த கர்ம வினைகள் தான் காரணம் என்பதை யாருமே உணர்வது கிடையாது.

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்காக தான் கடவுள் நமக்கான தண்டனையை கொடுக்கின்றான். இனி உங்களுடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சரி,

துன்பங்கள் வந்தாலும் சரி, அதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்து அதற்கான முயற்சிகளை எடுங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம் எந்த ஒரு நல்ல தகவலோடு இந்த பதிவினை தொடர்வோம்.

நாம் செய்த கர்ம வினைகளை பாவங்களை கழிப்பதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு நிறையவே வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

அதில் ஒரு சுலபமான பெருமாள் வழிபாட்டினை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெருமாள் வழிபாடு புண்ணியத்தை சேர்ப்பது. பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தாலே போதும். நமக்கு அது புண்ணியம் தான்.

இருப்பினும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்குவதற்கு என்று சாஸ்திரத்தில் சில வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்படி நம் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும். அது என்னென்ன விஷயங்கள்.

முதலாவது பெருமாள் கோவில் தீர்த்தம். நம்முடைய உடலில் கண்ணுக்கு தெரியாத எந்த பிணி இருந்தாலும் அதை தீர்க்க கூடிய சக்தி, இந்த பெருமாள்கோவில் தீர்த்தத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

தீர்த்த ரூபத்தில் நம் கையில் வருவது அந்த பெருமாள் தான். ஆக பெருமாள் கோவிலுக்கு சென்றால் கட்டாயமாக தீர்த்தத்தை வாங்கி பருகிக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக துளசி. பெருமாளுக்கு சூடியிருக்கும் துளசியை நம் கையில் வாங்கி நம் கண்களில் ஒற்றிக் கொண்டாலே போதும் பெருமாளின் அன்பினை நாம் முழுமையாகப் பெற்று விடலாம்.

பெருமாளின் அன்பை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் பெருமாள் கோவில் துளசியை கட்டாயம் நம் கைகளில் வாங்கி, நம் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.

பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இறுதியாக சொல்லப்படுவது சடாரி. இதுதான் நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடியது. அந்த பிரம்மா நம்முடைய தலை எழுத்தை எப்படி கிறுக்கி வைத்திருந்தாலும் சரி, அதை சரி செய்யக் கூடிய சக்தி இந்த சடாரிக்கு உண்டு.

சடாரிக்கு ‘பாதுகை’ என்ற மற்றொரு பெயரும் இருக்கின்றது. ‘பா’ என்றால் பாவத்தை விளக்குவது என்று பொருள். ‘து’ என்றால் துன்பங்கள் விலகும் என்பதும் பொருள்.

‘கை’ என்றால் அந்த பெருமாளே நம்முடைய வாழ்க்கையை கை கொடுத்து மேலே தூக்கி விடுவார் என்பது பொருளாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பாவங்கள் விலகி, துன்பங்கள் விலகி, வாழ்க்கையில் மேலே ஏறி வர வேண்டும் என்றால் பெருமாள் வழிபாட்டை மேல் சொன்னபடி தூய்மையான மனதோடு,

ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தாலே போதும். பல நன்மைகள் நம்மை தேடி வரும்.

இந்த புரட்டாசி மாதத்தில் ஒரு நாளாவது பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவில் தீர்த்தத்தைப் பருகி, பெருமாள் கோவில் துளசியை உங்கள் கையால் வாங்கி, சடாரியை உங்களுடைய தலையில் வைத்து கொள்ளுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

Previous Post

வீடு கட்ட போறீங்களா?

Next Post

அர்த்தம் அறிந்து சொல்வோம்.

Next Post
அர்த்தம் அறிந்து சொல்வோம்.

அர்த்தம் அறிந்து சொல்வோம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

March 7, 2026
பெரியாழ்வாரே தந்தையும் தாயும் ஆவார்

பெரியாழ்வாரே தந்தையும் தாயும் ஆவார்

March 6, 2026
மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »