முருகப்பெருமான் அகத்திய மகாமுனிவருக்கு உபதேசித்த யோகஞான பாடல்
போலி ஞானிகள் பற்றிய பாடல்
தானென்ற வழியறியா தன்னுயிரைத் தானென்று போற்றமாட்டான் வானென்று பொழியுமந்த அமுதம்சாரான் வாடாத மணிவிளக்கை யறியமாட்டான் தேனென்ற திரையேழை யறுக்கமாட்டான்
தேகசித்தி மாயசித்தி செய்யமாட்டான்
கோனென்ற குருபாத மடுக்கமாட்டான் கூறுவான் வாய்ப்பேச்சால் ஞானந்தாமே.
விளக்கம்
தனது முயற்சியினால் குருமுகமாக தன்னை கடைத்தேற்றும் யோகபயிற்சிகள் முதலான வழியினை பின்பற்ற மாட்டான் தனது உயிரான சீவனை அறிந்து தவத்தினால் அகக்கண் திறக்கும் வழியறிய மாட்டான் வான்மழைபோல் பொழிந்துகொண்டிருக்கும் மதியமுதம் பற்றி அறிந்திருக்கமாட்டான்
தன்னுள் சுடரொளியாக வீசிக்கொண்டிருக்கும் அந்த அணையா விளக்கை பற்றி அறியமாட்டான்
திரைகள் ஏழும் அறுக்கும் விதமும் அறிந்திருக்க மாட்டான்
கற்பம் முதலியன கொண்டு உடலை காயகற்பமாக மாற்றும் விதமும் அறிந்திருக்கமாட்டான்
உயர்ந்த குருமார்களிடம் உபதேசம் பெறவும் மாட்டான்
வாய்ப்பேச்சாலே தன்னையே அனைத்தும் அறிந்த ஞானிபோல வெளிக்காட்டி கொண்டும்
தர்க்கம் புரிந்து கொண்டும் இருப்பான்
குருவே சரணம்











