நமசிவாய வாழ்க 
சிவமே ஜெயம் சிவமே தவம்.எங்கும் அரன் நாமம் சூழ்க எங்கும் துயர் தீர்க 

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை பற்றிச் சூத முனிவர் நைமிசாரணிய முனிவர்களுக்கு கூறியதாவது .*
(1) சிவாலயம் எழுப்புபவன் தினமும் பெருமானை வழிபாடு செய்தால் உண்டாகும் சிறப்பை அடைகிறான்.
(2) அவன் குலத்தில் வாழ்ந்த நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.
(3) சிவாலயம் எழுப்ப வேண்டும் என்று மனதால் நினைத்தாலே ஏழு பிறவிகளில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவான்.
(4) ஆலயம் கட்டி முடித்தால் அதில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகள் சிவ லோகத்தில் இருக்கும் பேறு பெறுவர்.
(5) சிவலிங்கத்தை உருவாக்குபவர் சிவலோகத்தில் அறுபதினாயிரம் ஆண்டுகள் இருப்பார். அவரது தோன்றல்களும் சிவலோகத்தை அடையும் புண்ணியம் பெறுவர்.
(6) சிவாலயத் தொண்டுகளில் ஈடுபடுவோரை எமன் நெருங்கக் கூடாதென்று சிவ பெருமான் எச்சரித்து உள்ளார். அவர்கள் தலைமுறையினரைக் கூட எமதூதர்கள் நெருங்க மாட்டார்கள்.
(7) சிவாலயத்தில் உரிய பொருள்களால் அபிஷேகம் செய்து வழி படுபவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறுவான்.
(8) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவ லிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால் சர்வ பாவங்களும் விலகும்.
(9) பெளர்ணமி, அமாவாசைகளிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேக ,ஆராதனைகள் செய்வோர்க்கும் அத்தகைய பலனே கிடைக்கும்.
(10) பிரதோஷ காலங்களில் நெய்யபிஷேகம் செய்தால் அது தெரிந்தோ,தெரியாமலோ செய்த பாவங்களை நீர்மூலமாக்கும்.
(11) பசும்பாலால் அபிஷேகம் செய்தால் சிவலோகமடைந்து என்றும் மகிழ்சியாக இருப்பார்.
(12)நவக்கிரகங்களும் அவனுக்கு அருள் புரியும்.
(13) சிவ பெருமானை மனதிற்குகந்த மலர்களால் அர்ச்சனை செய்யலாம். உலர்ந்த வில்வமும் அர்ச்சனைக்கு உரியதே.
(14) மலர்களுக்குப் பதில் பிருங்கராச பத்திரம், அருகம்புல் போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம்.
(15) புண்ணியக் காலங்களில் சிவ பெருமானை வழிபடுவோர் தினசரி வழி பாட்டிலும் ஆயிரம் பங்கு அதிகமாக பலன் பெறுவர். அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி











