வருவானே வடிவேலன், வள்ளலென வழங்கவே
முன்னிற்கும் முருகனருள் என்றைக்கும் காத்திருக்கும்
தன்னிச்சை இல்லாது நிகழ்வனைத்தும் பார்த்திருக்கும்!
வருவானே வடிவேலன் வள்ளலென வழங்கவே
தருவானே பெறுவானே தடையின்றி அனைத்தையுமே!
இறையிலர் எனச்சிலர் பகர்வதும் கேட்டேன்
முறையிலா மொழியென நின்னால் புரிந்தேன்!
வரையிலா அன்பினை வற்றாது வழங்கும்
ஒருமுகம் கண்டதில் இறையெது தெளிந்தேன்!











