இந்த புகையை போட்டு விட்டாலே போதும்.
முன்னோர்கள் சாபம் விலக வீடு முழுவதும் இந்த புகையை போட்டு விட்டாலே போதும். முன்னோர்களின் கோபங்கள் நீங்கி, அவர்களுடைய ஆசீர்வாதத்தை சுலபமாக பெற்றுவிடலாம்.
வீட்டில் ஒரு கஷ்டம் வந்துவிட்டால் போதும். அந்தக் கஷ்டத்திற்கு முன்னோர்களின் சாபமும், முன்னோர்களின் கோபமும் காரணமாக இருக்குமோ, என்ற பயம் நம் எல்லோருடைய மனதிலும் வருகின்றது.
ஆனால் நமக்கு தீராத துன்பத்தைத் கொடுத்துவிட்டு, அதை பார்த்து நம்முடைய முன்னோர்கள் என்றைக்குமே சந்தோஷப்பட மாட்டார்கள்.
முன்னோர்களின் கோபத்தால் நமக்கு பெரிய அளவில் எந்த ஒரு துன்பங்களும் துயரங்களும் ஏற்படாது. முதலில் மனப்பூர்வமாக இதை நாம் நம்ப வேண்டும்.
முன்னோர்களை நினைத்து நாம் செய்யவேண்டிய திதி தர்ப்பண முறைகளை செய்யாமல் அவர்களை மறந்து விட்டால், அவர்களுடைய மன வருத்தத்திற்கு நாம் ஆகி விடுவோம்.
நம்முடைய சந்ததிகள், நம்மை மறந்து விட்டார்களே என்று மறைந்த ஆத்மாக்கள் மனதில் வரக்கூடிய ஏக்கம் சில பிரச்சனைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்க வாய்ப்புகள் உள்ளது.
ஆகையால் கூடுமானவரை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண முறைகளை சரியாக செய்து விடுங்கள்.
இது தவிர உயிரோடு இருக்கும்போது உங்களுடைய பெற்றோர்களை நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களை பசி பட்டினியோடு விட்டுவிட்டு, அவர்கள் மனம் வருத்தப்படும் படி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு, இறந்த பின்பு வயிறார சாப்பாடு போடுவதாக,
நினைத்துக்கொண்டு திதி தர்ப்பணங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலமும் எந்த பிரயோஜனமும் இருக்காது. இதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சரி, உங்களுக்கு முன்னோர்கள் சாபம் இருப்பதாக சந்தேகம் இருந்தால், ஒருவேளை உங்கள் ஜாதக கட்டத்தை பார்த்து முன்னோர்கள் சாபம் இருப்பதாக குடும்ப ஜோதிடர் சொல்லி இருந்தால்,
அதனை சரிசெய்ய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நல்ல வாசம் நிறைந்த ஊதுவத்தியை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் வீடு முழுவதும் போட்டுக்கொள்ள வேண்டும்.
சாம்பிராணி வாசம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் சமயத்தில், பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, உங்களுடைய கைகளில் 11 ஊதுபத்திகளை வைத்துக்கொண்டு
மனதார உங்களுடைய முன்னோர்களை நினைத்துக்கொண்டு அவர்களுடைய பெயர்கள் தெரிந்தால் அந்தப் பெயர்களை உச்சரித்து அவர்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். (உங்கள் கையில் இருக்கும் 11 ஊதுவத்தியிலிருந்தும் மணக்க மணக்க புகை வர வேண்டும்.)
‘அறிந்தோ அறியாமலோ நாங்கள் செய்த தவறுக்கு எங்களுக்கு உண்டான மன்னிப்பை கொடுத்து, இதுநாள் வரை எங்களுடைய குடும்பம் அனுபவித்து வந்த சந்தோஷத்திற்கு மனதார அவர்களுக்கான நன்றியையும் தெரிவித்து’
முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக அமாவாசை நாளில் இந்த பரிகாரத்தை செய்வது நம்முடைய குடும்பத்திற்கு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
தவிர வாரம் தோறும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்னோர்களை நினைத்து வீட்டில் மேல் சொன்ன முறைப்படி செய்த தவறுக்கான மன்னிப்பையும், குடும்பத்திற்கு கிடைத்த
சந்தோஷத்திற்கான நன்றியையும் தெரிவிக்கும் போது நம்முடைய குடும்பத்தில் வரும் பிரச்சினைகளுக்கு படிப்படியாக விமோசனம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறையை பின்பற்றி நல்ல பலனை அடையலாம்.











