மனதுக்குள் மிக ஆழமாக ஊடுருவிப் பாருங்கள் .
மனதின் உள் நோக்கங்கள் என்ன என்பதைக் கூர்ந்து கவனியுங்கள் ..
நாள் முழுவதும் மனம் உங்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கும் ..
அதனுடன் நீங்களும் ஒத்துழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் ..
உங்கள் மனதை தூண்டும் உண்மையான காரணத்தை
ஒவ்வொரு கணமும் கவனியுங்கள் ..
சரியான காரணத்தை உங்களால் கண்டு பிடிக்க முடிந்தால்
மனம் உங்களை ஏமாற்ற முடியாது ..
அப்போது மனம் பலவீனமாகி விடும்
மனதைக் கடந்து செல்ல உங்களால் முடியும்
மனம் உங்களை அடக்கிக் கொண்டும் அதிகாரம் செய்து கொண்டும் இருக்கிறது
அதன் உண்மையான உள்காரணங்களை உங்களால் பார்க்க முடிவதில்லை.
உள்ளே இருக்கும் நிஜமான செயல் நோக்கங்களை பார்க்கக் கூடியவராக ஆகி விடுங்கள்.
பிறகு தியானம் வெகு அருகில்
வந்து விடும்.
பிறகு மனமானது உங்களை இறுக பற்றிப் பிடிக்க முடியாது.
மனம் ஒரு யந்திரம்
அதற்கு நுண்ணறிவு என்பதே கிடையாது
அதற்கு செயல் ரீதியில் பயன்பாடு உள்ளது ஆனால்
அதற்கு விழிப்புணர்வு கிடையாது.
மனதில் ஓடும் ஒரு எண்ணம் கூட ஒரு போதும் அசலானதாக இருந்ததே இல்லை
எப்போதும் அது பழசையே திரும்பக்
கூறுவதாக இருக்கிறது ..
நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய
முயலுங்கள்
அப்போது மனம் உங்கள் மீது ஆதிக்கம்
செய்வது குறைந்து விடும் ..
வழக்கமான வாழ்க்கையையே நீங்கள்
வாழ்ந்து வரும்போது ..
மனமானது உங்கள் மேல் மிக அதிகமாய்
ஆதிக்கம் செலுத்தும் ..
அதிலிருந்து நீங்கள் விடுபட்டுக் கடந்து
செல்ல முடியாது ..
தினமும் ஏதாவது ஒன்றை புதிதாய்
புதுமையாய்ச் செய்யுங்கள் .
பழைய பாதையில் கவனம்
செலுத்தாதீர்கள் ..
இப்படி நீங்கள் மாறிச் செயல் படும்போது மனதின் ஆதிக்கம் குறையக் காணலாம்.
ஓஷோ
தியானம் என்பது நுண்ணறிவு











