தெய்வச் சேக்கிழார் பெருமான் – 🙏குருபூஜை நாள் : வைகாசி – பூசம்
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி
🌷திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் தந்த தெய்வச் சேக்கிழார்
சேக்கிழாருக்கு அவர்தம் பெற்றோர் வைத்த பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும். பிறந்த
குடிக்குப் பெருமை சேர்த்த கார ணத்தால் அவர் சேக்கிழார் எனவே வழங்கப்பெற்றார்.
சேக்கிழாரின் தந்தையின் பெயர் வெள்ளியங்கிரி முதலியார் என்பதும் தாயாரின் பெயர்
அழகாம்பிகை என்பதும் கர்ண பரம்பரைச் செய்தியாகும்
அந்நாளில் சைவம் சார்ந்த அன்பர்கள் பலரும் தங்கள் சமய மெய்நூல்களைப் பயிலாது சமணர்கள் புனைந்துரைத்ததும் சிற்றின்பச் சுவை மிகுந்ததும் ஆகிய சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி, அக்காவியச் சுவையில் ஈடுபட்டு, தம் சமயப்பெரியோர்களின் வரலாறுகளை அறியாது, பொழுது கழித்து வந்தனர். சோழமன்னனும் சிந்தாமணிக் கதையைச் சுவைபடக் கேட்டு, மனமகிழ்ந்து பாராட்டிக் களிப்புற்று வந்தான்.
🌻அது கண்ட அருண்மொழித்தேவராம் சேக்கிழார், அரசனை நோக்கி `வேந்தர் பெருமானே, தாங்கள் சைவமெய்ச் சமயத்தைச் சார்ந்தவராயிருந்தும் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங் களையும் தரும் சிவனடியார்களின் மெய்மை வரலாறுகளைக் கேளாது சமணர்கள் புனைந்துரைத்த பொய்க்கதையாகிய சிந்தா மணிக் கதையை மெய்யெனக் கருதிக் கேட்டல் தகுதியுடையதன்று என இடித்துரை கூறினார்.
அமைச்சரின் அறிவுரையைக் கேட்ட மன்னன், `நீவிர் கூறும் சிவகதை யாது? அதனை விளங்க உரைப்பீராக` எனக் கேட்டனன்.
🌺திருவாரூரில் விளங்கும் தியாகேசப் பெருமான் தம்முடைய அடியார்களின் பெருமைகளை விரித்துரைத்துப் போற்றுக எனக் கூறி, `தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` எனத் தாமே அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்னும் திருப் பதிகத்தால் சிவனடியார்களின் பெருமைகளைப் புகழ்ந்துப் போற்றி னார்.
அத் திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூரில் விளங்கும் பொல்லாப் பிள்ளையார் அருள்பெற்று அவர் உணர்த்திய வகையில் அத்திருத்தொண்டத் தொகையில் குறிப்பால் உணர்த்திய வரலாறு களைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்றதொரு நூலை அருளிச் செய்துள்ளார்.
👉🏽இவ்வரலாறு களைக் கேட்ட இராஜராஜமன்னர், சிவாலய தேவர் முதலாகவுள்ள அனைவரும் கேட்டு மகிழ்ந்து இவைகளே மெய்நூல்கள் எனப் பாராட்டியுள்ளார்கள்` எனக் கூறினார்.
அதனைக் கேட்ட சோழமன்னன், திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி வாயிலாகச் சேக்கிழார் கூறக்கேட்டு மகிழ்ந்து திருத்தொண்டர் வரலாறுகளைத் தெளிவாகவும் விரிவாக வும் அமைத்து ஒரு விரிநூல் செய்து தருமாறு சேக்கிழாரைக் கேட்டுக் கொண்டான்.
💐மன்னன் வேண்டுகோளை ஏற்ற சேக்கிழார், நடராசப் பெரு மான் அருள்துணையோடு தெய்வத் தமிழ்ப் பெருங்காவியத்தைப் பக்திச் சுவையும் இலக் கியச் சுவையும் இனிதே அமையப் பாடி முடித்தார்.
நடராசப்பெருமானுக்கு உகந்ததும், திருஞானசம்பந்தர் திருவ வதாரம் செய்ததும், அவருக்கு உமையம்மை ஞானப்பால் அளித்ததும் ஆகிய பெருமைகளை உடையது திருவாதிரை. இது கருதியே சேக்கிழார் பெருமான் தில்லையில் சித்திரைத் திருவாதிரையில் தொடங்கிச் சித்திரைத் திருவாதிரையிலேயே திருத்தொண்டர் புராணத்தை முற்றுவித்தார்.
🌱திருத்தொண்டர் புராணத் திருமுறையைக் கனகசபையின் முன்னே வைத்தார். மன்னர்பிரான் சேக்கிழாருக்குத் தொண்டர்சீர் பரவுவார் எனத் திருப்பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான்.
தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.
அவதாரத் தலம்: குன்றத்தூர்
இறைவன்: ஸ்ரீ திருநாகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீ காமாட்சியம்மை
முக்தி தலம்: தில்லை
🌷சேக்கிழார் துதி
தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி.











