நீ சுகமாக வாழ்வாய் – என்றும் நான் உன்னுடன் இருப்பேன்.
அன்பு குழந்தையே…
என் வார்த்தைகளை ஊன்றி கவனி. என் ஆலயம் செல். அங்கே என் நாமாவை பக்தி யோடு உள்ளம் உருகிச் சொல்.
வெறும் வார்த்தைகளால் என்னிடம் வேண்டுதல் செய். அவை எல்லாம் உன்ப் பாவ கர்மாக்களை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.
இனி வாழ்வில் துன்பநிலை மாறி, இன்ப நிலை அடையப்போகும் நீ, பட்ட கஷ்டங்க ளைப் பற்றி மறக்கத்தான் போகிறாய்.
அதை எப்போதும் நினைவுபடுத்தி கொள் வதற்காக நான்சொல்வதை சிறிது கவனி. வாழ்க்கையில் இன்பமாகத் தோன்றும் எதுவும் நிஜமான இன்பமல்ல.
சம்சார பந்தமென்கிற பாலை வனத்தில் நடக்கும் போது ஏற்படும் களைப்பை போக் கி தற்காலிகமாக நிழல்தரும் சிறுசோலை தான் இன்பம்.
துன்பமும் அத்தகையதே. தற்காலிக நிகழ் வாக உன்னை கொடுமைப்படுத்துவது போன்று இருக்கும். சுகமும் துக்கமும் மனோபாவத்தை பொறுத்த விஷயங்கள்.
வயிற்றுப் பசியை ஆற்றிக்கொள்ள எதை சாப்பிட்டால் என்ன, உடலை மூடிக்கொள் ள எதை உடுத்தினால் என்ன என்ற எண் ணத்திற்கு உன் மனதை பக்குவப்படுத்து.
மனதில் சுகமும் துக்கமும் தோன்றும் போது அதற்கு இடம் கொடுத்து விடாதே. இரண்டையும் ஒன்றுபோல நினை சகித்து க்கொள்.
இன்பமோ துன்பமோ அவையெல்லாம் இந்த உடலுக்கு உரியவை ஆன்மாக்கு அல்ல என்று நினை. அப்போது நீ சுகமாக வாழ்வாய்.
என்றும் நான் உன்னுடன் இருப்பேன்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்…











