117வது குருபூஜை மகான் ஸ்ரீலஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓத சுவாமிகள்💥
🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹
ஞானப்பழம் வேண்டி முருகப்பெருமானே ஞான குருவாகி நின்ற இடமான ‘பழம் நீ’ என்று கந்தக்
கடவுளைக் குறிப்பிடும்படியான பழனியில் எண்ணற்ற மகான்கள் உருவானதும் இங்கு தான்.
பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் வழியைப் பின்பற்றி எண்ணற்ற சித்தர்கள்
தோன்றினர்.அவர்களுள் தற்போது திண்டுக்கல் நகரில் அருளை வாரி வழங்கி பக்தர்களின்
நல்வாழ்விற்கு வழிவகுத்து வரும் ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு
வரும் இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்ரமணியம்.
கி.பி 1850 ஆம் ஆண்டு புரட்டாசித் திங்கள் திருவாதிரை நட்சத்திர நாளில் தோன்றியவரே ஓத
சுவாமிகள் ஆவார். சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்தவரே ஓத சுவாமிகள்
ஆவார்கள்.
அவதாரம்:-
🌻🌻🌻🌻🌻
ஸ்ரீமத் ஓத சுவாமிகள் மும்மூர்த்திகளின் அருளால் அவதரித்தவர் முக்கண்ணனின்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறப்பெடுத்தது சிறப்பன்றோ! . ‘தங்கள் குலம் தழைக்க சந்ததி
இல்லை’ என்ற மன வருத்தத்துடன் இருந்த பரமேஸ்வரர் காசி சென்றபோது “காசி
விஸ்வநாதனே உனக்கு மகனாகப் பிறப்பான்” என்னும் அசரீரி வாக்கு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து சுவாமிகள் ஊர் திரும்பியதும் பரமேஸ்வரர் தனது துணைவியாரிடம்
அக்கருத்தைச் சொல்லி இன்புற்றார்.
அன்னையின் சிறப்பு:-
🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️
ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகளின் தயார் கருவூர் பிரம்மஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் வம்சாவழி
வந்தவரே.மேலும் தியாகி சுப்ரமணிய சிவா சுவாமிகளின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
சுவாமிகளின் தாயார் திண்டுக்கல் அருகில் உள்ள வத்தலகுண்டு ஊரைச் சேர்ந்தவர். தாய்
கருவுற்று பிரசவ காலத்தின் போது மருத்துவச்சியின் துணையுடன் தனி அறையில்
இருந்தபோது அறையின் வெளியே காத்திருந்த பரமேஸ்வரருக்கு வேத ஒலி அறையின்
உள்ளிருந்து கேட்டது.
அறையின் உள்ளே சென்று பார்த்தபோது மிகுந்த நறுமணமிக்க ரோஜா மலர்களுக்கு இடையே
ஒரு ஆண் குழந்தை கிடத்தப்பட்டு இருக்க குழந்தையின் அருகிலும் ரோஜா மலர்கள் சிதறிக்
கிடந்தன.
பிரசவறையில் ரோஜா மலர்கள் வந்தது குறித்து மருத்துவச்சியிடம் விசாரிக்க அவள்
மும்மூர்த்திகளின் தெய்வீக அம்சம் பொருந்திய மூன்று நபர்கள் வந்திருந்ததை உரைக்க
அவரும் அதனை உணர்ந்து கொண்டபோது பழனி மலை மீது பூஜையின் போது ஒலிக்கப்படும்
பிரம்மாண்டமான மணியோசையும் கேட்டது.
உடனே குழந்தைக்கு ‘சுப்பிரமணியன்’ என்று பெயர் சூட்டினார்.பின்னா ளில் ‘சுப்பையா’ என்று
அழைக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகள் ‘ஓம்’ என்றும் ‘ஆதிசங்கராய’ என்றும் சொல்லிக்
கொண்டே இருந்த சுவாமிகளுக்கு ஐந்து வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு சிறுவயதில்
இருந்து இறைநாட்டம் அதிகம் உள்ளவராகத் திகழ்ந்தார்கள்.
சுவாமிகளின் தந்தையார் மறைந்த பின் தாயின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுவாமிகள் எட்டு வயதிலேயே அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றார்கள். திண்டுக்கல் மலைக்கோட்டையின் புதர் மண்டிக் கிடந்த காட்டுப் பகுதியில் இருந்த சில குகைகளில் தவம் இயற்றி வந்த சுவாமிகள் அங்கு ஒரு குளத்தையும் வெட்டி வைத்ததும் சுவாமிகளின் பெயரைக் குறிப்பிடும் வகையில் ‘அய்யன்குளம்’ என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ ரமணர்:-
🪷🪷🪷🪷🪷
ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகள் அவதூதராகத் தெருக்களில் வலம் வந்த போது ஒரு முறை ஸ்ரீரமணர் சுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவரைப் பின் தொடர ஆரம்பித்தார். சிறுவன் ஸ்ரீரமணரை அடையாளம் கண்டு கொண்ட ஓத சுவாமிகள் “நீ திருவண்ணாமலைக்குச் செல் அங்கு உனக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார்” என்று அருள்வாக்குரைத்த சுவாமிகள் திருஅண்ணாமலையில் ஒரு அருள் ஜோதி உதயமாகக் காரணமாக இருந்தவரே ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகள் ஆவார்.
சிருங்கேரி மடத்தின் 32 வது பீடாதிபதி நரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கல்லுக்கு விஜயம் செய்த போது பிரம்மஸ்ரீ ஓத சுவாமிகள் அங்கிருந்த சாக்கடை நீரில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஆச்சாரியார் பல்லக்கில் இருந்து இறங்கி வந்து சுவாமிகளிடம் உரையாடிய அவர் “மற்றவர்களின் அழுக்கைப் போக்கவே இவ்வாறு நீராடுகிறார்” என்றார்.
“மாபெரும் சித்த புருஷர் எவரும் இந்நிலையை அடைவது கடினம்” என்றார். இவ்வாறு பலவித அற்புதங்கள் நிகழ்த்திய ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகள் ஒரு பக்தரின் கனவில் தோன்றி “இன்னும் சில நாட்களுக்குள் நான் சித்தியாகப் போகிறேன்.
நிரந்தரமாகக் குடிகொள்ள ஒரு இடத்தைத் தேர்வு செய்” என்று சொல்லி மறைந்தார்கள்.
அதன்படி 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி சித்தியானார்கள்.
ஸ்ரீலஸ்ரீ ஓத சுவாமிகள் சித்தியான நட்சத்திரம் திருவாதிரை. சுவாமிகள் அவதரித்த நட்சத்திரமும் திருவாதிரை என்பது குறிப்பிடத்தக்கது.
குருபூஜை:-
🍁🍃🍁🍃🍁
ஸ்ரீமத் ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓத சுவாமிகளின் 117 வது குருபூஜை புரட்டாசித் திங்கள் முதல் நாளில் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓத சுவாமிகளின் குருபூஜை நடைபெற்றது.











