சங்கில்16வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை.
இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். ஆலயங்களில் சாதாரணமாக செய்யப்படும் சங்கு, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும். வலம்புரி சங்கு புனிதமும் ஆற்றலும் நிறைந்தது. இடது கையால் பிடிக்க தகுந்த அமைப்புடன் இருப்பது வலம்புரி சங்காகும்.
ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர் ஆவார்.
தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு உண்டு. வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க்கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட சங்கு மூலம் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது அந்த வழிபாடு இரட்டிப்பு பலன் தருவதாக மாறுகிறது.











