• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கார்த்திகை சோமவார பிரதோஷம்

siddharbhoomi by siddharbhoomi
December 5, 2022
in ஆன்மிகம்
0
கார்த்திகை சோமவார பிரதோஷம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கார்த்திகை சோமவார பிரதோஷம்

கார்த்திகை சோமவார பிரதோஷம் சிவபெருமானை நினைத்து இந்த பொருளை

தானமாகக் கொடுத்தால் போதும். தீராத கடனும் தீரும்.

சிவபெருமானுக்கு உகந்த மாதம் கார்த்திகை மாதம் என்பது நாம் எல்லோரும்

அறிந்த ஒரு விஷயமே. இந்த கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை

விரதமிருந்து, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ

கடாக்ஷம் நிறைந்திருக்கும்.

கடன் சுமை குறையும். அதுமட்டுமல்லாமல் இந்த ஜென்மத்தில் நாம்

பெற்றிருக்கும் பிறவி கடனையும் அடைத்து விடலாம். மோட்சத்தை அடையலாம்.

கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்கு உரிய மாதம் என்றுதான் நாம்

எல்லோரும் நினைத்திருக்கிறோம். ஆனால் இந்த மாதத்தை ஹரிஹர மாதம்

என்றும் சொல்லுவார்கள்.

கார்த்திகை மாதம் விரதம் இருக்கும் போது சிவபெருமானை மட்டுமல்ல,

பெருமாளையும் மனதார நினைத்து வழிபாடு செய்யவேண்டும். ஹரியும் ஹரனும்

ஒன்று என்பதற்காக இந்த வழிபாட்டு முறை நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
☘️
இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் குபேரனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற முடியும் என்று சிவ புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குபேரருக்கு, குபேர சம்பத்து கிடைப்பதற்கான ஆசீர்வாதத்தை வழங்கியவர் ஐஸ்வர்ரேஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்படிக லிங்கத்தை வாங்கி வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் வறுமை இருக்காது. மிக சிறிய அளவிலான ஸ்படிக லிங்கங்கள் கிடைக்கின்றன. அதை பூஜை அறையில் வாங்கி வைக்கலாம்.
☘️
உங்களுடைய வீட்டில் ஸ்படிகலிங்கம் இருந்தால் அந்த லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தும், சந்தன குங்குமப் பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வில்வ இலையால் இன்று அர்ச்சனை செய்ய வீட்டில் ஐசுவர்யா கடாட்சத்திற்க்கு ஒருபோதும் குறைவு இருக்காது.

சரி, எல்லோர் வீட்டிலும் இந்த ஸ்படிக லிங்கம் இருக்காது. ஸ்படிகலிங்கம் இல்லாதவர்கள் என்ன செய்வது. மஞ்சளில் சிவலிங்கம் பிடிக்கலாம்.

விபூதியில் சிவ லிங்கம் பிடித்து வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபாடு செய்யலாம்.
☘️
சிவனுக்கு உகந்த நேரம் என்றால் அது பிரதோஷம் நேரம் தான். கார்த்திகை மாதம் சோமவார தினத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

இன்றைய தினம் சிவபெருமானை நினைத்து கடன் தீர்வதற்கு எனது தானம் செய்வது.
☘️
2 வெற்றிலை, 2 கொட்டை பாக்கு, 2 நெல்லிக்காய், 2 விரலி மஞ்சள், வாசனை மிகுந்த பூ, இந்த பொருட்களை ஒன்றாக தாம்புல தட்டில் வைத்து கோவிலில் இருக்கும் புரோகிதருக்கு அதாவது ஐயருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

கார்த்திகை சோமவார தினத்தில் இந்த தானத்தை நாம் செய்தால் நம்முடைய பிறவிக்கடனோடு சேர்ந்து இருக்கும் இந்த ஜென்மத்தில் வாங்கியிருக்கும் கடனும் படிப்படியாக குறையும் என்று கார்த்திகை புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
☘️
உங்களால் முடிந்தால் மாலை நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு நெல்லிக்கனியை வாங்கி தானமாக கொடுக்கலாம். 15, 21, 51 என்ற கணக்கில் உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த நெல்லிகாய் தானம் கொடுக்கலாம்.

நெல்லிக்காய் என்பதும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய ஒரு பொருள். இந்த பொருளை இன்றைய தினம் சிவபெருமானையும் விஷ்ணு பகவானையும் நினைத்து தானம் செய்யும்போது நம்முடைய வீட்டிற்கு வறுமை என்பதே இருக்காது.

நம்முடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். கடன் சுமை குறையும். வாழ்வில் செல்வ வளங்கள் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தானத்தை செய்து பலன் பெறலாம்.

Previous Post

ஏகாதசி விரதம்

Next Post

கார்த்திகை திருநாள்

Next Post
கார்த்திகை திருநாள்

கார்த்திகை திருநாள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »