மஹாசிவராத்திரி அன்று என்ன செய்யலாம்?
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மஹா_சிவராத்திரி
☘️
வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மஹாசிவராத்திரி எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
☘️
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மஹாசிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். இந்நாளின் மூன்றாம் ஜாமக் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும் என்பது ஐதீகம்.
☘️
சிவனுக்குரிய நாளான மஹாசிவராத்திரி இந்த வருடம் பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம், கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம். அத்தகைய மகத்துவமிக்க நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி பார்க்கலாம்.
☘️
செய்ய வேண்டியவை :
☘️
மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானை நினைத்து, சுக போகங்களை தவிர்த்து ஒருவேளை மட்டும் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
☘️
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, நீராடி விட்டு காலை வேளையில் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்துவிட்டு, சிவாலயங்கள் சென்று வழிபட வேண்டும்.
☘️
வீட்டில் சிவ பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, தேவையான பொருட்கள், மாலை, தோரணங்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். நண்பகலில் நீராடி விட்டு, உச்சிகால பூஜைகளை செய்ய வேண்டும்.
☘️
சிவாலயங்களில் நடைபெறும் பூஜைக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்ய வேண்டும்.
☘️
மாலை நேரத்தில் மீண்டும் நீராடி விட்டு அலங்கரித்து வைத்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
☘️
நான்கு கால சிவ பூஜையில் பூஜைக்கு தேவையான வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
☘️
சிவ பூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.
☘️
சிவராத்திரியன்று வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலியவற்றை படிக்கலாம். இல்லையேல் அடுத்தவரை படிக்க சொல்லி கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.
☘️
செய்யக்கூடாதவை :
☘️
சிவராத்திரி அன்று பகலில் தூங்கக்கூடாது. சிவராத்திரி அன்று கண்விழிக்க வேண்டும் என்பதற்காக கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.
☘️
சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும், மனதாலும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
☘️
நான்கு கால பூஜையின் போதும் பிரசாதம் விநியோகம் செய்து விரதம் இருப்பவர்களின் சிவராத்திரி விரத்தை கெடுக்க வேண்டாம், அதிகாலை 6 மணிக்கு அன்னதானம் செய்யலாம்.!











