• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஸ்ரீநடராஜர் விக்கிரகமாக உறைந்த சிவனடியார்.

siddharbhoomi by siddharbhoomi
April 1, 2023
in ஆன்மிகம்
0
ஸ்ரீநடராஜர் விக்கிரகமாக உறைந்த சிவனடியார்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஸ்ரீநடராஜர் விக்கிரகமாக உறைந்த சிவனடியார்.

திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம் – ஸ்ரீநடராஜர் விக்கிரகமாக உறைந்த சிவனடியார்.

திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம், ஒரு சிறிய அழகிய கிராமம். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில், வடமட்டம் என்னும் ஊருக்கு முன் கோனேரிராஜபுரம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஸ்தலம் திருநல்லம் உள்ளது

இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில்… மனித உடலில் இருப்பது போன்று ஒரு ‘மரு’வையும் முடியையும் காணலாம்!

உலகிலேயே பெரியதாகக் கருதப்படும் இந்த விக்கிரகம் இங்கு வந்தது எப்படி? அதற்கு சுவாரஸ்யமான கதை உண்டு.

சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், ”கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாட்களுக்குள் வடிக்க வேண்டும்.

அது, அளவில் பெரிதாகவும் அனைவரும் பாராட்டும்படியும் இருக்க வேண்டும்!” என்று கட்டளையிட்டார் மன்னர்.

சிவ பக்தரான அந்த சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரக பணியைத் துவக்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்து கொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும் போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது!

சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். ‘விக்கிரகம் இன்னும் தயாராகவில்லை!’ என்பதை அறிந்து சினம் கொண்டவர், ”இன்னும் இரண்டு நாட்களில் விக்கிரகம் தயாராகவில்லை எனில்,

உம் தலை தரையில் உருளும்!” என்று ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, ‘அம்பலவாணா… இது என்ன சோதனை!” என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித்துக் கொண்டிருந்தது.

அப்போது, ‘ஐயா’ என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு சோகத்துடன் வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார்.

”ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்… சுடுதண்ணீராக இருந்தால் நன்று!” என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! ‘இன்னும் இரண்டு நாட்களில் என் தலை உருளப் போகிறது;

இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!’ என்று சலித்துக் கொண்டவர், ”உள்ளே, உலைகலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்!” என்றபடி வெளியே அமர்ந்து விட்டார்.

சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது! ஸ்ரீநடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார்.

அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! ‘என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?’ என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்தார். கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப் பணிந்தார்.

இந்த சம்பவம், மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று நிகழ்ந்தது என்பர்.

Previous Post

நடமாடும் தெய்வம் நடப்பது ஏன் ?

Next Post

சமாதி தரிசனம்

Next Post
சமாதி தரிசனம்

சமாதி தரிசனம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »