ஸ்ரீ அரவிந்த பகவான் பக்தர்களுடன் தியானம் செய்யும் போதெல்லாம் அவரைச் சுற்றி ஒளிவெள்ளத்தைக் கண்டு உடலில் மின்சாரம் பாய்வதைப் போன்று உணர்ந்திருந்தார்கள். ஸ்ரீ அரவிந்தர் இறுதி காலத்தில் தனிமையை நாடி கடைசி 24 ஆண்டுகள் தனிமையும், மௌனமும் பூண்டிருந்தார்.
அதிமன சக்தியை உலகுக்கு கொண்டு வரும் முயற்சியில் தேவைப்பட்டால் நான் என் உடலை விட்டு நுண்ணுடலில் சென்று போராடுவேன் என்றார்.
1950 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று இறையாற்றலைப் புவி மீது இயக்கி மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் மகா சமாதி ஆனார். அவர் மறைந்தும் அவரது உடலில் ஒளிவீசியது.
அவர் சமாதியான 5 நாட்களுக்குப் பிறகே ஆசிரமத்தில் சர்வீஸ் மரத்தடியில் பக்தர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை அவரது முகப்பொலிவும் குறையவில்லை. உடலும் வாடவில்லை.











