பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர்⚡
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம்⚡உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம்
பெற்ற ஊர்⚡‘திருமந்திர நகர்’⚡ கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறு நில மன்னனான சங்கரராம பாண்டியன்⚡இத்தல இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால் கோயில் எழுப்பினான்✨











