அன்னையைத் தெய்வமாக உணர்ந்து, ஏற்றுக்கொள்ளுதல் ஆத்மாவுக்குச் சிறப்பு.
அன்னையின் முறைகளை உணர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் நிச்சயம் தோல்வி இருக்காது.
நம் முயற்சியின் அளவுக்கு ஏற்ப வெற்றியின் அளவுகளும் இருக்கும். அளவுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் இந்த உலகத்திலிருந்து கிடைக்கும் மற்ற எல்லாவற்றையும் விட அவை மகோன்னதங்களாக இருக்கும்.
அன்னைக்குக் கடுமையான நோன்புகள் தேவையில்லை.
ஆனால் பக்குவமான, கண்ணியமான கட்டுப்பாடு தேவை. கட்டுப்படாமல் ஓடும் நீர் கட்டாறு ஆகின்றது. கட்டுப்படுகின்ற நீர் மின்சாரம் ஆகின்றது. காட்டாறாக ஓடுகின்ற நம்மை மின்சாரமாக ஒளி பெற வழிகாட்டுகின்றார் அன்னை.
இதை உய்த்து உணர்ந்து, நிதானமாகப் பக்குவத்தை மேற்கொண்டால், நம் அன்றாட வாழ்வு அன்னை வழியில் ஆத்மிகச் சிறப்பு நிறைந்த யோக வாழ்வாக மாறும்.
ஸ்ரீ கர்மயோகி.











