சோமவாரம் சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது திங்களை முடிசூடிக் கொண்டவர் அதுமட்டுமில்லாமல் இந்த சிவனுடைய பெயர் சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் இந்த பெயர் கனவில் அவரே கூறி பெயரை சூட்டி கொண்டவர் இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது.
இங்கு உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசி அமைத்து அதன்மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார் இவரை வழிபட்டால் எமபயம் நீங்கும் இதய சம்பந்தபட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள் அதனால் அன்று சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் கோர்ட்டில் வெற்றி வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள் பக்தர்கள் இவரை தரிசிக்து வேண்டிய வரத்தை பெற வேண்டுகிறோம்.
சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவத்தையும் தீரும், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்,1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். கோடி தானம் செய்த பலன் கிடைக்கும்.
காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும்.வேள்விகள் செய்த பலன் கிடைக்கும்.ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும்.
திங்களன்று உபவாசம் இருந்து (ஆகாரம் ஏதும் இன்றி) சர்வ தோஷ நிவர்த்தீஷ்வரரை கிரிவலம் கிரிவலம் வந்தால் நீங்கள் மனதில் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.











