பிராணாயாமம் என்பது போதிக்கக் கூடியதில்லை. நீங்களாக
அதைக் கண்டறிய வேண்டும். காரணம், ஒவ்வொருவருடைய மூச்சும் வெவ்வேறு சீர்த்தன்மை கொண்டதாயிருக்கும். ஒவ்வொருவருடைய மூச்சும் அதன் சீர்த்தன்மையும் பெருவிரல் இரேகை மாதிரி அதிக அளவில் வேறுபடும்.
Ganapthi Executive Diary (New Year Diary 2024)
சுவாசித்தல் என்பது தனி நபருக்குரிய நிகழ்வு,
அதனால்தான் நான் அதை ஒரு காலத்திலும் போதிப்பதில்லை.
உங்களுடைய சீர்த்தன்மையை நீங்கள்தாம் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்கள் சீர்த்தன்மை வேறொருவருடைய சீர்த்தன்மையாகாது.
அல்லது வேறொருவருக்கு அது தீங்கு விளைவிப்பதாயிருக்கலாம்.
உங்களுடைய சீர்த்தன்மையை – நீங்கள்தான் கண்டறிய வேண்டும்.
அது ஒன்றும் கடின காரியமல்ல. சிறப்பறிவு கொண்ட எவரிடமும்
கேட்டறிய வேண்டிய அவசியமில்லை.
Tirupathi Balaji Executive Diary (New Year Diary 2024)
உங்களுடைய மனநிலைகள், வாழ்க்கை இயல்புகள் (நிலைமைகள்) பற்றி ஒரு மாதத்துக்கான வரைபடத்தைத் தயார் செய்யுங்கள். நீங்கள் எந்தச் சீர்த்தன்மையில் மிகவும் அமைதியாய், ஓய்வாய் உணர்கிறீர்கள், எந்தச் சீர்த்தன்மையில்
தொல்லையற்றதாய், கிளர்ச்சியற்று உணர்கிறீர்கள், எந்தச்
சீர்த்தன்மையில் அறிந்திராத ஒன்றால் நிரப்பப்பட்ட, நிரம்பி வழிகிற பரமசுகத்தை உணர்கிறீர்கள் என்பதை அப்போது அறிவீர்கள்.
அந்தக் கணத்தில் நீங்கள் மிகுதியான அளவில் பெற்றிருப்பீர்கள். உலகம்
முழுமைக்கும் கொடுத்தாலும் அது தீர்ந்து போகாது. பிரபஞ்சத்துடன்
நீங்கள் ஒன்றாகும் அந்தக் கணத்தைக் கவனியுங்கள்.
அனுபவித்துணருங்கள்.
கவனியுங்கள். உங்கள் மூச்சில் பல சீர்த்தன்மைகள் இருப்பதை, மிகப்பெரிய நிறமாலை (spectrum)யைக் கண்டு கொள்வீர்கள். மிகவும் உணர்ச்சிவேகம் மிக்க, அருவருக்கத்தக்க, நரகம் போன்ற கொடுமையான
பிரிவில் இருந்து, மிகவும் அமைதியான சொர்க்கப்பிரிவு வரை பல சீர்த்தன்மைகள்.
உங்களுடைய சீர்த்தன்மையை நீங்கள் கண்டறிந்ததும் அதைப் பயிற்சி செய்யுங்கள், அந்தத் தன்மையில் உங்கள் வாழ்க்கை ஒரு யோகியின் வாழ்க்கையைப் போலாகி விடும். நீங்கள் கோபப்பட
மாட்டீர்கள். உங்களிடம் பால்சார்ந்த உணர்வும் மிகுதியாயிருக்காது.
முடிந்தவரை விரோத மனப்பான்மையையும் கொண்டிருக்க
மாட்டீர்கள். திடீரென்று உங்களிடம் ஓர் உருமாற்றம் (transmutation)
நிகழ்வதாய் உணர்வீர்கள்.
மனிதப் பிரக்ஞைக்கு நேரிட்ட மிகப்பெரிய கண்டுபிடிப்புகளுள்
ஒன்று பிராணாயாமம்.
-Osho











