சூரசம்ஹாரதன்று செய்யக் கூடாதவை
சூரசம்ஹாரம் என்பதே சூரபர்த்தனை முருகன் வதம் செய்த தினம் தான். அத்தகைய உக்கிரமான இந்த நாளில் நாம் யாரிடமும் கோபப்படக் கூடாது. அனாவசியமான பேச்சுக்கள் கூடாது. தீய சொற்கள் கெட்ட செயல்கள் போன்றவற்றை சிந்தையிலும் நினைக்காமல் இருக்க வேண்டும். யாரையும் ஆபாச வார்த்தைகள் சொல்லி திட்டி நம்முடைய கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது.
அடுத்து சூரசம்ஹாரம் நடைபெறும் இந்த நாளில் மறந்தும் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் நிச்சயமாக அன்றைய தினம் கடைபிடிக்க வேண்டும். அடுத்ததாக வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்று வெறும் நெற்றியுடன் இருந்தால் அது அமங்கலத்தை குறிக்கும்.
நான்காவதாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். அன்றைய தினம் ஆண்கள் முகசவரம் செய்வது, நகத்தை வெட்டுவதோ கூடாது. பெண்கள் முடி திருத்தம் போன்றுவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இன்றைய தினத்தில் இது போன்ற காரியங்களை அறவே செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இத்துடன் சூரசம்ஹாரம் தினத்தன்று பகல் உறக்கம் கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதையும் விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது. ஆகையால் விரதம் இல்லாதவர்கள் கூட இன்றைய ஒரு தினமாவது முருகப்பெருமானை நினைத்து பகல் முழுவதும் அவருடைய நாமத்தை சொல்லி கந்தனின் அருளை பெறலாம்.
#surasaamhaara #Surasaamhaaratantseyakoodaadhavai #TamilNaduCulture #TamilNaduTraditions #TamilHeritage #SouthIndianTraditions #SouthIndianCulture #SouthIndianHeritage #IndianTraditions #IndianCulture #IndianHeritage #TraditionalFestivals #FolkArts #CulturalCelebrations #TamilMusic #TamilDance #TamilDrama #ClassicalMusic #ClassicalDance #ClassicalDrama #Artforms #TraditionalPerformingArts #CulturalHeritage #PreservingTraditions #PromotingCulture #CulturalAwareness











