தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்தத் ‘தை’ திருநாளில்
நேசத் ‘தை’ வளர்ப்போம் !
பாசத் ‘தை’ பகிர்வோம் !
நல்ல ‘தை’ யே நினைப்போம் !
உள்ள ‘தை’ யே பேசுவோம் !
பழைய ‘தை’ மறப்போம் !
புதிய ‘தை’ படைப்போம் !
தீய ‘தை’ துரத்துவோம் !
புண்ணியத் ‘தை’ சேர்ப்போம் !
கண்ணியத் ‘தை’ க் காப்போம் !
மனிதத் ‘தை’ மதிப்போம் !
புனிதத் ‘தை’ காப்போம் !
தெய்வத் ‘தை’ போற்றுவோம் !
பொங்கல் வாழ்த்துக்கள் 2024











