என்னை மாத்திரம் நினைத்திடுங்கள்.
பாருங்கள், என்னைப் பாருங்கள்.
நான் எனது ஒளி பொருந்திய உடலில் மீண்டும் வந்துள்ளேன்.
நான் அதே அன்னை தான்.
மனித ஜீவன்தான்.
கவலைப்படாதீர்கள்.
நான் இங்கிருக்கிறேன்.
என்னைப் பாருங்கள்.
என்னுள் நுழைந்து பாருங்கள்.
என்னுள் முழுவதுமாக கலந்து விடுங்கள்.
எனது இருப்புடன் கரைந்து விடுங்கள்.
எனது அன்பில் உங்கள் அன்பை கலந்து விடுங்கள்.
எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடுவதை, எல்லாம் நிறைவேறுவதைக் காண்பீர்கள்.
மற்றதனைத்தையும் மறந்து விடுங்கள்.
உலகை மறந்து விடுங்கள்.
என்னை மாத்திரம் நினைத்திடுங்கள்.
என்னோடு ஒன்றுபடுங்கள்.
எனது அன்புடன்,











