• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தைப்பூச வரலாறு மற்றும் சிறப்புகள்.

siddharbhoomi by siddharbhoomi
January 25, 2024
in ஆன்மிகம்
0
தைப்பூச வரலாறு மற்றும் சிறப்புகள்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தைப்பூச வரலாறு மற்றும் சிறப்புகள்.

🔥🦚#அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில், தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக

கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில்

முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது.

🔥🦚#தைப்பூச நாளான 25ஆம் தேதி அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11

மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில்

எழுந்தருளல் நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 28ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.🙏🏾

தைப்பூசத்தின் சிறப்புகள்

பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன், சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணிய திருநாள் தைப்பூசம் ஆகும். ஆகவே தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.🙏🏾

தைப்பூச நாளில் வள்ளலார் முக்தி அடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச தினத்தன்று பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். மேலும் இந்நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும், சிவபெருமான் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.🙏🏾

அத்துடன் வாயு பகவானும், வருண பகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.🙏🏾

🔥🦚 #முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு அங்கு நடைபயணமாக செல்வது தொன்றுதொட்ட வழக்கமாக உள்ளது.

🔥🦚#தைப்பூசத்தன்று கோயில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதாவது கோயிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக ஊர் முழுவதும் அழைத்து வருவர்.

“தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால் ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமண பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஏதேனும் ஒப்பந்தம் செய்தல் போன்ற நற்செயல்களை மேற்கொள்கின்றனர்.

🔥🦚#தைப்பூச நாளில் முருகப்பெருமானிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக சென்று அவற்றை முருகனுக்கு செலுத்தி பூஜை செய்வார்கள்.

தைப்பூச வரலாறு

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான் ஆவார்.

🔥🕉️ #சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.🙏🏾

💃🔱#அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான்.

🔱💃#அம்பாள் அளித்த வேலை ஆயுதமாக கொண்டே, தேவர்களுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்தார். அதனால் முருகப்பெருமானை போலவே அவரது வேலுக்கும் தனி சக்தி உண்டு என கூறுகின்றனர்.

👹🔱🔥#அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேலை பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை தந்தருளும் என்பது ஐதீகம்.

🙏🏾🦚#முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.

🔥🙏🏾#அகஸ்திய முனிவருக்கு ‘இடும்பன்’ என்ற ஒரு சீடர் இருந்தார். ஒருமுறை இடும்பனை அழைத்த அகஸ்தியர், கயிலைக்குச் சென்று அங்கு முருகனின் மலையான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான ‘சிவகிரி’, ‘சந்திரகிரி’ என்னும் இரண்டு மலைகள் வழிபாட்டிற்கு தேவைப்படுகிறது கொண்டு வா என்றார்.

🙏🏾🦚#குருவின் கட்டளையை ஏற்று இடும்பன், கந்தமலைக்குப் புறப்படுகிறார். இருமலைகளையும் சுமந்து வருவதற்கு வசதியாக காவடியாகக் கட்டி, அதைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு புறப்படுகிறார்.

இதனைக் கண்ட முருகப் பெருமானோ, தனது விளையாட்டைத் தொடங்குகிறார். இரண்டு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வருகிறார் முருகன். மேலும் இடும்பனுக்கும் அருள் புரிய வேண்டும் என்றும் எண்ணினார்.🙏🏾

🔥🙏🏾#இந்த_இரு மலைகளையும் தாங்கி வரும் இடும்பனுக்கோ நடுவில் வழி தெரியாமல் நின்றபோது ஓர் அரசனைப் போல் தோற்றம் எடுத்து வந்த முருகன், இடும்பனை ஆவின்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்.

🦚 #இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அச்சிறுவனோ, இந்த மலை எனக்கே சொந்தம் என்கிறான்.

👹🦚#கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முயல, அப்படியே சாய்ந்து விழுகிறான் இடும்பன். இதனை அறிந்த அகஸ்தியர், முருகனிடம் வேண்ட இடும்பனுக்கு ஆசிவழங்குகிறார் முருகன். இடும்பனைத் தன் காவல் தெய்வமாகவும் நியமனம் செய்கிறார். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

ஆகையால் வேண்டுதல் நிறைவேறிய பின் முருகனுக்கு காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

தைப்பூச விரதமுறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்வர்.

🦚🔥🙏🏾 #தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

🦚🔥#தைப்பூசத்திருநாளில் வேலுக்கு பூஜை செய்வதும். வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும், வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களை கொடுக்கவல்லது.

🦚#இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வதும், வீட்டில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும், வீட்டிற்கு அருகில் உள்ள முருகப்பெருமான் தலங்களுக்கு சென்று தரிசிப்பதும் தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தை போக்கி சந்தோஷத்தை பெருக்கி தரும்.

🦚🙇 #தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் என எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.

🦚🔥#தைப்பூச விரத பலன்கள்

தைப்பூச நாளில் முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.🙏🏾

🔱🦚 #இந்நாளில்_முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது. மேலும் இந்நாளில் விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.🙏🏼

🦚🙏🏼 #தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனை தரும்.

🦚#தைப்பூசத்தன்று பழனி முருகப்பெருமானின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.🙏🏼

💃🙇#திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும். 🙏🏼

🦚🔥#தைப்பூசத்திருநாளில் பழனி முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்தியும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது.🙏🏼

Previous Post

கிரக சேர்க்கையும் ராகுகால பூஜை

Next Post

ஸ்ரீ ஹரிபவன் உணவகம்

Next Post
ஸ்ரீ ஹரிபவன் உணவகம்

ஸ்ரீ ஹரிபவன் உணவகம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »