• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குடந்தைக் காரோணம் காரோணேஸ்வரர் திருக்கோயில்

siddharbhoomi by siddharbhoomi
February 25, 2024
in கோயில்கள்
0
குடந்தைக் காரோணம் காரோணேஸ்வரர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

குடந்தைக் காரோணம் காரோணேஸ்வரர் திருக்கோயில்

கும்பகோணம் காசி விஸ்வ நாதர் கோயில் எனப்படும் குடந்தைக் காரோணம் காரோணேஸ்வரர் திருக்கோயில்

இது கும்ப கோணத்தில் உள்ளது. மாசி மகக் குளக் கோயில் .

குடந்தையில் லிங்கப் பரம்பொருளைப் பூஜித்துத் தவம் செய்து வழிபட்ட கங்கை யம்மனை ஈசன் மீண்டும் திருமுடியில் ஏற்றுக் கொண்டருளியதால் குடந்தைக் காரோணம் என்று பெயர்.

பகீரதனுக்காக ஏழுகிளைகளாய் பூமியில் இறங்கிக் காசியில் பாயும் கங்கை நதி யம்மனுக்கு அருள் புரிந்த ஈசனுக்குக் காரோணேஸ்வரர்,
காசி விஸ்வ நாதர் என்று அருள் நாமங்கள்.

🔯 மாடு அடுத்த மலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே ! (சம்பந்தர்)

☄️ சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும் (அப்பர்)

என்று பாம்பினையும் சந்திரனையும் தலையில் சூடிக் கொண்டது போல் கங்கையையும் முடியில் சூடிக் கொண்ட எல்லாம் வல்ல பரம்பொருளின் கருணையைத் திருத்தெளிச் சேரித் திருப் பதிகத்தில் தெய்வக் குழந்தையாரும் திருக் கச்சி மேற்றளிப் பதிகத்தில் திரு நாவுக்கரசரும் காட்டுகின்றனர்.

பாதித் திருமேனி பெண்ணாகும் அர்த நாரீசரது இடப் பாகத்திலிருந்து தோன்றி வந்த பராசக்தி தட்சன் மகள் கௌரி காமாட்சியாக இறந்த பின்னர் பார்வதியாகப் பிறந்து மீண்டும் ஈசனது இடப் பாகத்தில் ஐக்கியமானது போல் அகிலாண்டேஸ்வரனது திருமுடியிலிருந்து வந்த கங்கை யம்மனும் கூப்பிய கரங்களுடன் மீண்டும் தண்ணீர்ப் பெருமானின் திருமுடியில் இடம் பெற்றாள்.

🙏 பகீரதற்காய் வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல் கங்கை
பனி போல் ஆங்குச் செறித்தானை (அப்பர்)

என கங்கையைப் பெறுவதற்காகத் தவம் செய்த பகீரதனோடு வானவர்களும் தொழுது வேண்டிய போது ஆயிரம் நதி வேகத்துடன் பாய்ந்த கங்கை நதியை ஒரு சிறு பனித் துளி போல் திரு முடியில் அடக்கிப் பூவுலகைக் காத்து அருளிய *எல்லாம் வல்ல கங்காதரர் பகீரதனுக்காக கங்கை நதியைத் திருமுடியிலிருந்து ஏழு கிளைகளாகப் பிரித்துப் பூவுலகில் விடுத்தார்.

பரம்பொருள் கங்கையை பூமிக்கு விடுத்த நாளே தென்னாட்டில் கங்கா ஸ்நானம் என்று தீபாவளித் திருநாளாய்க் கொண்டாடப்படுகிறது.

மீண்டும் ஈசனைக் காண விரும்பிய கங்கை யம்மன் பல தலங்களில் நந்தி அனுமதி பெற்று சிவ பூஜை செய்து கும்ப கோணத்தை அடைந்து பூஜித்தாள்.

கங்கையுடன் மற்ற நதி தேவியர்களான யமுனை சரஸ்வதி நர்மதை காவிரி துங்க பத்திரை கிருஷ்ணை சரயு கோதாவிரி கன்னி குமரி ஆகிய பிற தேவியர்களும் வந்தனர்.

நதி மாதர்கள் திருக் குளம் உண்டாக்கி நீராடி லிங்கப் பரம்பொருளைப் பூஜித்து வணங்கிப் புனிதம் அடைந்தனர்.

🔯 தேனார் மொழியார் திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே (சம்பந்தர்)

என குளத்தில் நீராடி லிங்கப் பரம்பொருளை வழிபட்டு ஆடல் நாயகனது திருக் காட்சி களித்தனர்.

இந்தக் குளமே மாசி மகக் குளம் என்று காசி விஸ்வ நாதர் கோயில் வாயிலில் உள்ளது.

குளக் கரை முழுவதும் சிறு சிறு கோயில்கள் உள்ளன.

குளக்கரையில் உள்ள கோயில்களில் கருவறையின் பின் புறச் சுவற்றில் அழகிய இருபால் அலிப் பெருமான் அம்மையப்பன் உள்ள அபிமுகேசுவரர் கோயில் பெரியது.

பூஜையும் தவமும் புரிந்து ஈசனது திருக் காட்சி கண்ட கங்கை யம்மன் மீண்டும் திருமுடியில் ஏற்றுக் கொள்ளுமாறு தொழுது வேண்டினாள்.

கங்காதரர் கங்கையை மீண்டும் திருமுடியில் நிலை பெறச் செய்து அருளினார்.

மனிதனுக்கு மனைவியாகி வாழ்ந்து எட்டு குழந்தைகளைப் பெற்ற கங்கை என்ற பெயருடைய மகா பாரத பீஷ்மரின் தாயைப் பரமன் திருமுடியில் நிலை பெற்ற தெய்வீக கங்கை யம்மன் என்று கூறுவது லட்சுமி சரஸ்வதி என்று பெயர் கொண்ட பெண்களை யெல்லாம் அந்தந்த தெய்வங்கள் என்று கூறுவது போல் கடைந்தெடுத்த பாவிகளின் மிகக் கொடூரமான அருவெறுக்கத் தக்க நாஸ்திகக் கற்பனை யாகும்.

கன்னி குமரி தவிர
பிற ஒன்பது தேவியர்களின் பெரிய உருவங்கள் காசி விஸ்வ நாதர் கோயில் பிரகாரத்தில் வரிசையாக உள்ளன.

அஞ்ஞான ஆலய நிர்வாகத்திற்குக் கன்னி குமரி என்ற நதி தேவியர் பற்றி தெரியாது.
சொந்த நாடு ஆனதால் பொன்னி யம்மன் (காவிரி) தனிச் சிறப்புடன் உள்ளாள்.

வெளியே நுழை வாசல் முகப்பிலும் ஒன்பது மாதர்களின் உருவங்கள் வண்ணச் சுதைச் சிற்பமாக உள்ளன.

நதி தேவியர் ஓரிடத்தில் கூடியது கண்டு அந்தந்த நதி பாயும் நாட்டு மன்னர்களும் மற்றும் பிற உலக வாசிகள் பலரும் வந்து நந்திக் கொடி உடைய காசி விஸ்வ நாதரைப் பணிந்து போற்றினர்.

⚜️ முடியார் மன்னர் மட மான் விழியார் மூவுலகும் ஏத்தும் படியார்
பவள வாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்தக்
கொடி ஆர் விடையார் மாட வீதிக் குடந்தைக் குழகாரும்
கடி ஆர் சோலைக் கலவ மயில் ஆர் காரோணத்தாரே

என்று தெய்வ பாலகர் போற்றுகிறார்.

இந்த கோயிலுக்கும் உமையவளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை .

விசாலாட்சி காசி வாசிகளுக்கே தெரியாத தென்னிந்தியர்களின் சமீப காலக் கற்பனை யம்மன்.

காசியில் விஸ்வ நாதர் கோயிலுக்கு அருகே உள்ள கோயில் நாட்டுக் கோட்டைச் செட்டிகளால் கட்டப்பட்ட தற்காலக் கோயில்.

காமாட்சி தட்சாயிணியாக இருந்த போது உண்டான பெயர்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை ஒற்றை மா மரப் பரமனைக் காண வேண்டும் என்ற விருப்பத்துடன் கடிய தவம் செய்ததால் காமாட்சி என்று பெயர்.
தட்ச யாகத்தில் தற்கொலை செய்து கொண்டு துர்மரணம் அடைந்தாள்.

மீனாட்சி மீண்டும் மதுரையில் மீனவப் பெண்ணாகப் பிறந்தவள் .

மீனாட்சியே இல்லாத காலத்தில் உண்டான சுயம்பு லிங்கச் சொக்க நாதர் கோயிலைக் கடத்தி மீனாட்சி கோயில் என்று வாய் கூசாமல் பொய் பேசும் சிவ துரோகிகள் மீனவப் பெண்ணை சுத்தமாக மறக்கின்றனர்.

அரச குலத்து மீனாட்சிக்கும் பரதவ குலத்து மீனவப் பெண்ணுக்கும் சுந்தரேசர் எந்தப் பார பட்சமும் காட்டவில்லை.

பெருங் கருணையுடன் வந்து கரம் பிடித்து மீண்டும் தெய்வம் ஆக்கினார்.

Previous Post

திருவண்ணாமலை அரூப சித்தர்கள்

Next Post

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Next Post
கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »