• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

siddharbhoomi by siddharbhoomi
May 12, 2024
in கோயில்கள்
0
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும்.அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது.

இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரியில்,அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் என்னும் பேராற்றலாக எழந்தருளியுள்ளது .

பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளது.

இன்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும்.காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும்.இக்காட்டாறு

இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் தென்குமரி தெய்வத்தின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகினுக்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும் புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

இச்சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள்.தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள்.பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள்.

காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.ஒரு பட்டியிலிருந்து காராம்பசு ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்போன் அறிந்தான்.

மறுநாள் மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று கவனித்தான்.அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தான்.

இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியோர்களிடமும் விபரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு மாட்டினைப் பின் தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் ( மாடு ) காராம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான். அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியனைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள்.

இது தெய்வத்தின் திருவிளையாடல் என்றெண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்யும் போது கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு ( மண்ணார்க்காடு ) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் எனப் போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார்.

அன்னையின் அருள்வாக்கின் படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர்.

பின்பு ஊர் மக்களும் பெரியதனக்காரர்களும் அன்னையின் சிறப்புக் கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோயில் அமைத்து பத்மபீடத்துடன் திருவுருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

Previous Post

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) புனித நாள்

Next Post

ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமி,வரலாறு

Next Post
ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமி,வரலாறு

ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமி,வரலாறு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »